சிலர் பணம் இல்லாமல் வாழலாம் என்பார்கள். ஆனால் பணம் இல்லாமல் நிம்மதியாக சாகக் கூட முடியாது என்ற நிலைதான் இப்போது காணப்படுகிறது. இதனால் தான் பணம் சேர்க்க கவனமாக இருக்கிறோம்.
நம்முடைய வாழ்க்கையில் அதிகம் மெனக்கெடல்களை செல்வம் சேர்க்கத்தான் செய்கிறோம். பணம் ரொம்ப இருந்தால் கஷ்டம் குறையும் என நம்புகிறோம். சிலர் கடன் வாங்கியாவது தேவைகளை பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் கடன் வாங்கினால் அது அடுத்தக்கட்ட பிரச்சனை ஆகிவிடும். கடன் வாங்காமல் நிம்மதியான செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ சாஸ்திரங்கள் சில வழிமுறைகளை வைத்துள்ளது. அதை நாம் தெரிந்து கொண்டால் பல பிரச்சனைகள் தீரும். அதில் குளியல் முறை முக்கியமானது.
சாஸ்திர விதிகளின் படி குளித்தால் நன்மைகள் பெருகும். ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கும் எண்ணெய் குளியலில் சில விதிகள் உள்ளன. சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள நாள்களில் குளித்தால் நாம் நினைக்கும் காரியங்கள் நடக்கும். பெண்கள் வெள்ளிக்கிழமை, புதன் கிழமை ஆகிய நாள்களில் எண்ணெய் குளியல் மேற்கொண்டால் வீட்டில் லட்சுமி காடாட்சம் பொங்கும். வீட்டில் என்றும் குறையாத செல்வம் வேண்டும் என்பவர்கள் புதன்கிழமை தலைக்கு குளிக்க வேண்டும்.
குறையாத செல்வம் அருளும் குளியல்!
பெண்கள் புதன்கிழமையில் வெந்தய குளியலை மேற்கொண்டால் வீட்டில் என்றும் குறையாத செல்வம் கிடைக்கும். இதனை செய்ய செவ்வாய் கிழமை அன்று இரவில் வெந்தயத்தை ஊற வையுங்கள். மறுநாள் காலை விடிந்ததும் 6.30 மணிக்குள் ஊற வைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளியுங்கள். ஆனால் வெந்தயம் ரொம்ப குளிர்ச்சி என்பதால் கவனமாக இருங்கள். இந்த குளியலை ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சம் வராது.
இதையும் படிங்க; கழுத்தை நெருக்கும் கடனால் திணறுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்... உடனடி தீர்வு!
வெந்தயத்தால் ஜலதோஷம் போன்ற இன்னல்களுக்கு ஆளாகத நபர்கள் வெந்தய குளியல் அன்று எண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம். இன்னொரு விஷயம் தெரிந்தால் ஆடி போய்விடுவீர்கள். புதன்கிழமை எண்ணெய் குளியல் பெண்களின் அறிவை வளர்க்குமாம். வெறுமனே புதன் கிழமை வெந்தய குளியல் மட்டும் செல்வத்தை அள்ளி தந்துவிடாது. குளித்து பரிசுத்தமான பிறகு வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து விட்டு, அருகாமையில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு போய் வாருங்கள். காலை அதிகமான வேலை பளு இருந்தால் மாலை கூட செல்லுங்கள். கவனத்தில் கொள்ளுங்கள், புதன் அன்று கோயிலுக்கு செல்வதுதான் அவசியம்.
கிரகங்களில் ஒன்றான புதனுக்கு உரியது வெந்தயம். அந்த கிரகத்தின் தினத்தன்று வெந்தய குளியல் செய்தால் பலன் கிடைக்கும். இந்த குளியல் செல்வம் மட்டுமல்ல வசீகரமான அழகையும் தரும். ஏன் பெருமாளை வணங்க வேண்டும் என்றால் அவர் தான் புதனுக்கு இணக்கமான தெய்வம். புதன் கிழமை என்று புதன் கிரகத்திற்கு ஏற்ற கடவுள் பெருமாள் அவருக்கு இணக்கமான வெந்தய குளியல் எல்லாம் ஒரே நாளில் செய்துவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
நம் வீட்டு செல்வம் அள்ள அள்ள குறையாமல் பெருகும். பெருமாளை கண்டு ஆராதிக்கும் மனம் அமைதியுறும். வெந்தய குளியலால் உடல் குளிரும். இதை தொடர்ந்து செய்தீர்கள் என்றால் குடும்பத்தில் சச்சரவுகளை உண்டாக்கும் பொருளாதார பிரச்சனைகள் அடியோடு ஒழியும். பெருமாளின் அனுகிரகமும் புதன் அருளால் புதுமைகளும் நடக்கும்.
இதையும் படிங்க; sleeping direction: பணம் கொழிக்கணும் நிம்மதியா இருக்கணுமா? இந்த திசையில் தலைவெச்சு படுங்க!