கடன் தொல்லை குறையாமல் இருக்க கர்மவினைகளும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
எல்லோருக்கும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழவே விருப்பமாக இருக்கும். வரவுக்கு மேல் செலவு செய்யக் கூடாது என நினைப்போம். முதல் செலவே சேமிப்பு தான் என உறுதி எடுப்போம். ஆனாலும் செலவு குறையாது; கடனையும் அடைக்க முடியாமல் திணறுவோம். ஏன் தான் கடன் தொல்லை குறையாமல் இருக்கிறதோ என அங்கலாய்ப்போம்.
சமீபத்தில் 28 வயது மதிக்கத்தக்க ஒருவர் தான் சம்பாதிக்கும் மொத்த பணமும் கடன் அடைக்கதான் போதுமானதாக இருக்கிறது என தெரிவித்தார். உணவுக்கு என்ன செய்கிறார் என. கேட்டபோது தன்னுடைய அம்மாவின் வருமானத்தில் தான் வீட்டில் சமையல் தயாராகும். அவர் தான் அன்னமிடும் தெய்வமாக இருக்கிறார் என்றார். எத்தனையோ ஆயிரங்களை கொட்டியும் கடன் தொல்லை அடங்கவில்லையாம்.
கடன் தொல்லையால் வீட்டில் அமைதி இல்லாமல் போவது வாடிக்கையாகி வருகிறது. விவாகரத்து, வீட்டை விற்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளின் அடிநாதமே கடன் பிரச்சனைதான். சிலருக்கு பரிகாரங்கள் செய்தாலும் இந்த கடன் பிரச்சனை தீராமல் இருக்க சில காரணங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் விளக்குகின்றன.
தேவைக்கு வாழ்பவர் பிழைப்பார்கள்!
தங்களுடைய வருமானம் அறிந்து தேவையை மட்டும் பூர்த்தி செய்பவர்கள் கடனில் மூழ்குவதில்லை. தகுதிக்கு மீறி ஆடம்பரங்களில் ஈடுபடுவது, பகட்டிற்காக செலவு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டால் எந்த பரிகாரமும் உங்களை காக்க முடியாது. தேவைக்கும் குறைவாக வாழ்வதும் தவறுதான். தேவைக்கு மீறி செலவு செய்வது தவறுதான். இருக்கும் பணத்தை கொண்டு வளமான வாழ்வை வாழ நினைப்பவர்களுக்கு தான் பரிகாரம் உதவும். ஆடம்பர செலவுகளில் வாழ்க்கையை தொலைப்பவர்கள் இனியாவது புரிந்து கொள்ளுங்கள். கடனில் வாழ்வது நிம்மதியின்மையை தான் கொடுக்கும்.
இதையும் படிங்க; பில்லி சூனியத்தால் கவலையா? கருங்காலி மரத்தை பத்தி தெரிஞ்சுக்கோங்க!
நம்முடைய சில கர்ம வினைகளால் கூட கடனை அடைக்க முடியாமல் திணறுவோம். கர்ம வினைகளை நம்மை விட்டு அகலாது. அதனுடன் நாம் எடுக்கும் பரிகார முயற்சிகள் பலிக்காது. அதனை ஒரு வழிக்கு கொண்டு வந்து பரிகாரம் செய்தால் தான் நமக்கு பலன் கிடைக்கும். அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை இங்கு காணலாம்.
கல் உப்பும், கற்றாழையும்!
கல் உப்பினையும், கற்றாழையும் பயன்படுத்தி செய்யும் பரிகாரங்களை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் பரிகாரம் செய்யும்போது அற்புதமான பலங்கள் கிடைக்கும்.
வீட்டை நிர்வகிக்கும் நபர் தான் இந்த பரிகாரத்தை கட்டாயம் செய்ய வேண்டும். கணவன் வீட்டை நிர்வாகம் செய்தால் அவரும், மனைவி செய்தால் மனைவியோ, மகன் நிர்வகித்தால் மகனோ செய்ய வேண்டும்.
எப்படி செய்வது?
வீட்டின் பிரதான ஹாலில் நின்றபடி, வலது கையில் உப்பை எடுத்து கொண்டு அதை இடது கையில் மாற்றி விடுங்கள். இதைப் போலவே கற்றாழையை கீறி அதனுள் இருக்கும் ஜெல்லை வலது கையில் எடுத்து இடது கையில் மாற்றி கொள்ளுங்கள். இரண்டுமே இடது கையில் இருக்க வேண்டும் என்பது பரிகாரத்தின் முக்கிய விதி. கையில் வைத்துள்ள ஜெல்லையும், உப்பையும் கிழக்கு பார்த்தபடி நின்று சுற்றி போடுங்கள். வீட்டில் மூத்தவர்கள் இருந்தால் அவர்களை கடிகாரம் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றி போட சொல்லுங்கள்.
இல்லையெனில் நீங்களே உங்களுக்கு சுற்றி போடுங்கள். சிறியவர்களை கொண்டு சுற்றி போடுவது தவறு. சுற்றி முடித்த பின்னர் ஜெல்லையும், உப்பையும் கால் படாத பகுதியில் போட்டுவிட்டு கை, கால்களை தூய்மைபடுத்தி கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வாரம் ஒரு முறை செய்வது அவசியம். ஞாயிறு செய்தால் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் செய்வதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். நம்பிக்கையோடு இதை செய்து வந்தால் திருஷ்டி போன்றவை கூட நீங்கும்.
இதையும் படிங்க; இறந்த மயிலை பார்த்துள்ளீர்களா? 'மயில் துயில்' குறித்து சித்தர்கள் சொல்லும் அரிய உண்மை!