மயில்களின் இறந்த உடல்களை எங்கேனும் பார்த்துள்ளீர்களா? இயற்கையில் உயிரிழக்கும் மயில்களின் உடல்களை காண முடியாதாம்.
மற்ற விலங்குகளின் சடலங்களை நாம் எப்போதாவது பார்த்திருப்போம். காகம், குருவி போன்ற பறவைகளின் உடல்களை கூட சாலைகளில் ஏதேனும் விபத்தில் காயங்களோடு கண்டிருப்போம். ஆனால் மயில்களின் உடல்களை அப்படி காண முடியாது. அதாவது இயற்கை மரணம் அடைந்த மயில்களின் உடல்களை தான் இங்கு குறிப்பிடுகிறேன்.
மர்மமான காரணங்களால் கொத்து கொத்தாக உயிரிழந்த மயில்களை குறித்து செய்திகளில் படித்திருப்பீர்கள். ஆனால் வயதாகி முதுமையில் இறந்த மயில்களுக்கு என்ன ஆகும் என்று தெரியுமா? மயில்களால் மரணத்தை கூட கணிக்க முடியுமாம். அடடே உண்மையாவா? ஆம் உண்மையாகவே தான். முருகனின் வாகனமான மயில் புனிதமாக கருதப்படுகிறது. அதனுடைய இறகு பூஜை அறைகளில் இடம் பிடிக்க கூடியவை. மயில் இறகினை வெள்ளை நிற நூலில் கட்டி பூஜை அறைகளில் வைத்து 'ஓம் சோமாய நமஹ'எனும் மந்திரத்தை தொடர்ந்து கூறி வந்தால் வீட்டு வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க; பில்லி சூனியத்தால் கவலையா? கருங்காலி மரத்தை பத்தி தெரிஞ்சுக்கோங்க!
அப்படிப்பட்ட அருள் கொண்ட மயில் மரணத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்னால் அதனை அறிந்து விடுமாம். அப்போது ஏதேனும் மலையில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று தங்கிவிடுமாம். அதுவும் ஆள் அரவமில்லாத இடத்தில் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு படுத்து கிடக்குமாம். கொஞ்சம் நீர் மட்டும் எடுத்து கொள்ளுமாம். இதனை தான் மயில் துயில் என்பார்கள். இறப்பதற்கு முந்தைய வாரம் எதுவும் உண்ணாமல் இருக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.
இறப்பதற்கு முந்தைய நாள் மாட்டின் கோமியத்தை ஏழு துளி மட்டும் தான் அருந்துமாம். இதுவரை சொல்லிய தகவல்களே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். இதன் பின் வரும் தகவல் பிரமிப்பை உண்டாக்கும். மயிலின் கண்ணீர் துளிகளை 6 துளிகளை பாறை பிளவில் விட்டதும் பாறை திறக்குமாம். அதில் அமர்ந்து மயில் தோகையை விரிக்கும்போது முருகனின் நாமத்தில் உருகி உயிரை துறக்கும்.
தோகையில்லா பெண் மயில்கள் இதற்கு பதிலாக வேல மரத்தில் கண்ணீரை விட்டு அதில் உயிர் விடும். வெள்ளை நிற மயில்கள் கொஞ்சம் வினோதம். வேலவன் கையில் உள்ள வேலில் பறந்து போய் விழுந்து உயிர் நீக்கும். விபத்தில் இறந்த மயில்களை மற்ற மயில்கள் புற்றுக்கு அருகே கொண்டு சேர்க்கும். இது குறித்த தகவல்களை மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் தன்னுடைய மயில் அகவல் என்னும் நூலில் எழுதியுள்ளார் என கூறப்படுகிறது. மயில்கள் இறப்பில் இப்படி ஒரு உண்மை இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இதையும் படிங்க; sleeping direction: பணம் கொழிக்கணும் நிம்மதியா இருக்கணுமா? இந்த திசையில் தலைவெச்சு படுங்க!