பலரும் கொலு வைப்பதை பாரம்பரியமாக வைத்து வருவார்கள். அவர்களுக்கு எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது தெரியும். புதிதாக தங்களின் வீடுகளில் கொலு பொம்மை வைக்க விரும்புபவர்களுக்கு அதை எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரிந்து அதன்படி வைப்பது அவசியம். அப்போதுதான் அதன் பலன்கள் முழுமையாக கிடைக்கும்.
மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிசாசூரனை மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, வதைத்ததை தான் நவராத்திரி விழாவாக கொண்டாடி வருகின்றோம்.
அதேபோன்று நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள், திறமைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, நம் கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது. இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக வீடுகளில் கொலு வைக்கப்படுவது வழக்கம்.
பலரும் கொலு வைப்பதை பாரம்பரியமாக வைத்து வருவார்கள். அவர்களுக்கு எப்படி கொலு வைக்க வேண்டும். எந்த வரிசையில் கொலு பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது தெரியும். புதிதாக தங்களின் வீடுகளில் கொலு பொம்மை வைக்க விரும்புபவர்களுக்கு அதை எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரிந்து அதன்படி வைப்பது அவசியம். அப்போதுதான் அதன் பலன்கள் முழுமையாக கிடைக்கும்.
முதலில் 3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வைக்க வேண்டும். பூமியில் உயிரினங்கள் படிப்படியாக தோன்றியதையும் அதில் மனிதனின் வாழ்க்கை எப்படி படிப்படியாக உயர்ந்தது என்றும், மனிதன் வாழ்க்கையில் மேன்மடைய எப்படி படிப்படியாக தான் கடந்து முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த கொலு படிகள் அமைக்கப்படுகின்றன.
அதனால் தான் உயிரினங்களின் அடிப்படையில் கொலு படியின் ஒவ்வொன்றிலும் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு உயிரனங்கள் என வரிசையாக அடுக்குவது அவசியமானது.
Navartri : நவராத்திரி - ஒவ்வொரு நாளின் சிறப்பு என்ன தெரியுமா?
முதல் படி - ஓரறிவு உயிரினங்கள்: மரம், செடி, கொடி ஆகியவை ஓரறிவு. இவற்றை முதல் படியில் அடுக்க வேண்டும்.
இரண்டாம் படி - ஈரறிவு உயிரனங்கள்: நத்தை, சங்கு இவை எல்லாம் ஈரறிவு.
மூன்றாம் படி - மூவறிவு உயிரனங்கள்: கரையான், எறும்பு இவை எல்லாம் 3 அறிவு உயிரனங்கள்.
நான்காம் படி - நான்கறிவு உயிரனங்கள்: நண்டுக்கும், வண்டுக்கும் 4 அறிவு.
ஐந்தாம் படி - ஐந்தறிவு உயிரனங்கள்: பறவைகள், விலங்கினங்கள் வைக்கலாம்.
ஆறாம் படி - ஆறறிவு உயிரனம்: அதாவது மனிதன். மனிதர்கள் கடைப்பிடிக்கும் பழக்கமான, திருமணங்கள், கடை வியாபாரம் செய்வது போல, நடனம் ஆடுவது போல உள்ள பொம்மைகள் வைக்கலாம்.
Navratri : தமிழகத்தில் நவராத்திரி கொண்டாட்டம்
ஏழாம் படி - மனிதர்களிலிருந்து உயர்ந்த மகான்களின் பொம்மைகளை வைக்கலாம். அதாவது விவேகானந்தர், வள்ளலார்,காஞ்சி மகா பெரியவர் போன்ற மனிதர்களிலிருந்து மகானாக உயர்ந்தவர்களை வைக்கலாம்.
எட்டாம் படி - பகவானின் அவதாரங்களை வைக்கலாம். தசாவதாரம், அஷ்டலட்சுமிகளின் பொம்மைகள் வைக்கலாம்.
ஒன்பதாம் படி - ஒன்பதாம் நிலையில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லெட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளும், பூரண கலச கும்பத்தையும் வைக்கலாம். இதோடு நாம் பிள்ளையார் பொம்மையையும் வைக்க வேண்டும்.
சிலர் பூரண கலசத்தை கீழே வைத்து விடுவார்கள். சிலர் மேலே வைப்பார்கள். இப்படி வரிசைப்படி ஒவ்வொரு நிலையாக பொம்மைகளை அடுக்கி வைப்பதற்கு கொலு என கூறப்படுகின்றது.
வீட்டில் கண்ணாடி உடைந்தால் துர்சம்பவம் உண்டாகுமா ?
ஒவ்வொரு பிறவியிலும் இத்தகைய உயிரின அவதாரங்களை கடந்தே மனிதன் இறுதியில் இறைவனை அடைகிறான் என்றும் சொல்லலாம். அதனால் கிடைப்பதற்கரிய மானிடனாய் பிறந்ததற்கு மனிதன் தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த கொலுபடிகட்டுகள் என்று சொல்லலாம்.