திருப்பதி போவோருக்கு முக்கிய தகவல்.. அங்கபிரதட்சனம் செய்ய வேண்டுமா.? ஆன்லைன் முன்பதிவு தேதி அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2022, 2:53 PM IST
Highlights

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கபிரதட்சணம் சேவைக்கான ஆன்லைன் பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டோக்கன் 22ஆம் தேதி காலை 9  மணிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கபிரதட்சணம் சேவைக்கான ஆன்லைன் பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டோக்கன் 22ஆம் தேதி  காலை 9  மணிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய்  டிக்கெட், அங்கப்பிரதட்சணம் டோக்கன்,  மற்றும் கட்டண சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் விடப்பட்டுள்ளது. இதை இம்மாதம் 21, 22 ஆகிய நாட்களில் தேவஸ்தானம் ஆன்-லைனில் வெளியிட உள்ளது.

நவம்பர் மாதம் ரூபாய் 300 தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடுவதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இம்மாதம் 21ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தனம் அறிவிப்பில் ஏழுமலையானை தரிசித்த தற்கான டிக்கெட்டுகள் மற்றும் நவம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம்,  ஊஞ்சல் சேவை மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை மாதம் 21ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும்.

இதேபோல் மின்னணு குலுக்கல் முறையில் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கட்டண சேவை டிக்கெட்டுகள் இம்மாதம் 27ஆம் தேதி ஆன்-லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் 22ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என  தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகளுக்கான டிக்கட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

click me!