மே 27ம் தேதிக்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலனை பார்ப்போம்.
மேஷம்:
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்து மகிழ்வீர்கள். அவசரத்தில் எடுத்த முடிவை மாற்றுவீர்கள். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
ரிஷபம்:
சமூக வேலைகளில் பிசியாக இருப்பீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க இதுவே சரியான நேரம். நடத்தைகளில் கவனமாக இருக்கவும்.
மிதுனம்:
இன்று முக்கியமான முடிவு எடுப்பீர்கள். கவலை நீங்கும். கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம். தொழிலில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்:
வேலையில் வெற்றி கிடைக்கும். கிரக அமைப்பு உங்களுக்கு சாதகமாக உள்ளது. வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.
சிம்மம்:
ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தேங்கிக்கிடந்த வேலை வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் சார்ந்த முக்கியமான மற்றும் சரியான முடிவை எடுப்பீர்கள்.
கன்னி:
கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்று மேம்படுவீர்கள். பொருளாதார சூழல் மேம்படும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
துலாம்:
இன்று உங்களுக்கு சாதகமான தினம். உங்கள் திட்டங்களை செயல்படுத்த தொடங்க இதுவே சரியான நேரம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும்.
விருச்சிகம்:
உங்கள் இலட்சியத்தை அடைய முழு எனர்ஜியுடன் செயல்படுவீர்கள். இன்று வெற்றி கிடைக்கும். வெளிவேலைகளில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
தனுசு:
சொத்து பிரச்னை சுமூகமாக முடியும். கோபம் மற்றும் சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். தொழில் சார்ந்த முடிவுகளை நிதானமாக எடுங்கள்.
மகரம்:
குழந்தைகளின் பிரச்னைகளை தீர்க்க உதவுங்கள். நிலுவையில் இருந்த நீதிமன்ற வழக்கு இன்று முடிவுக்கு வரும். கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்படலாம்.
கும்பம்:
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். வாகனம் வாங்க ஏற்ற சமயம் இது. உணர்ச்சிவசப்படுவதுதான் உங்கள் பலவீனம். அது உங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும்.
மீனம்:
உங்கள் பிரச்னைகளை தீர்க்க குடும்பத்தினர் உதவுவார்கள். ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும்.