கையில் எந்தெந்த மரத்தின் வேரை கட்டினால் நல்லது நடக்கும் தெரியுமா?

Published : May 26, 2023, 01:35 PM ISTUpdated : May 26, 2023, 02:29 PM IST
கையில் எந்தெந்த மரத்தின் வேரை கட்டினால் நல்லது நடக்கும் தெரியுமா?

சுருக்கம்

 Wearing Tree Roots: ஜோதிடத்தின்படி, மரங்களை வழிபடுவதாலும், கையில் மரத்தின் வேரை அணிந்துகொள்வதாலும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். எந்தெந்த மரங்களின் வேர்களை அணிவது சுப பலன்களைத் தரும் என இங்கு காணலாம். 

இந்து மத சாஸ்திரங்கள், ஜோதிடத்தில் மரங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மரங்களுக்கும், கிரகங்களுக்கும் கூட தொடர்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சில மரங்களை வழிபடுவதால் கிரகங்கள் உக்கிரம் தணிந்து சாந்தம் அடையும் என்பது ஐதீகம். அந்த வகையில் எந்த மரங்களின் வேர்களை கையில் அணிவது நன்மைகளை தருகிறது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இப்படி மரத்தின் வேரை அணிவதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். உங்களுடைய வாழ்வில் துன்பங்கள் நீங்கி வெற்றியும், செழிப்பும் கிடைக்கும். 

ஜோதிடத்தில், கிரகங்களுக்கு ஏற்ற ரத்தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ரத்தினங்களை எல்லோராலும் வாங்க முடிவதில்லை. அதனால் ரத்தினம் அணிய முடியாதவர்களுக்கு, மரத்தின் வேர்கள் மாற்றாக வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாழ்வில் வெற்றி பெறவில்லை என்றால், உங்கள் ஆளுமையில் எந்த ஈர்ப்பும், அதிர்ஷ்டமும் இல்லை என பொருள். வில்வ மரத்தின் வேரை அணிந்தால் மனம் திடமாகும். எடுத்த காரியம் வெற்றி அடையும். 

மனக்குழப்பம், எதற்கும் பயந்து, முடிவெடுக்க இயலாமல், கவனக்குறைவாக இருப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் கிர்ணி வேரை அணிய வேண்டும். திருமண வாழ்க்கையில் டென்ஷன் இருந்தால், மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை வந்தால், மாமியார் உங்களை ஆதரிக்காவிட்டால் அனந்தமூல் மர வேரை அணிவது நல்லது. 

குழந்தைகள் அறிவில் மேம்பட, நினைவாற்றல் பெருக, படிப்பில் கவனம் செலுத்த வசம்பு அணிவது நன்மை தரும். சந்தன மரத்தின் வேரை அணிவதால் ராகு பிரச்சனை நீங்கும். அஸ்வகந்தா வேர் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நீக்குகிறது. கெட்ட சக்திகளை விலக்கி வைக்கும். 

இதையும் படிங்க: குலம் காக்கும் குலதெய்வம் யார் என்று தெரியாமல் கவலையா? இந்த 1 காரியம் செய்தால் உங்க குலதெய்வம் மனதில் தோன்றும்

வேலையில் தடை, திருமணம் தள்ளி போவது, வியாபாரம் சுணக்கம் போன்ற சூழ்நிலையில் மஞ்சளை கயிறில் கட்டி கையில் அணிவதால் எல்லா காரியங்களும் வெற்றியடையும். வாழ்வின் சிறு சந்தோசங்களைக் கூட பெறத் தவறினால், ஆமணக்கு வேரை அணியுங்கள்.  

விபத்துகள், பண இழப்பு, குடும்ப உறுப்பினருக்கு ஆரோக்கியமின்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஊமத்தை வேர் சிறந்ததாக கருதப்படுகிறது. நீங்கள் எந்த மரத்தின் வேரை கையில் அணிந்தாலும், அதை பாலில் கழுவி, இறைவனின் பாதங்களில் வைத்து எடுத்த பின்னர் அணிந்தால்தான் பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: செல்வம் செழிக்க ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போதும்!! இதை செய்தால் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் அத்தனையும் நீங்கும்!!

PREV
click me!

Recommended Stories

கணவரை இழந்த பெண்கள் பூச்சூடுவது சரியா? தவறா? போட்டுடைத்த தேசமங்கையர்கரசி.! பெண்களுக்கான முக்கிய தகவல்.!
குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? எந்த வயதில் பலன்கள் பார்க்க வேண்டும்? தேசமங்கையர்கரசி விளக்கம்.!