பயணத்தின் போது கருப்பு பூனை குறுக்கே வந்தால் அபசகுனமா?ஜோதிடம் கூறுவது என்ன?

By Kalai SelviFirst Published May 26, 2023, 9:03 PM IST
Highlights

நீங்கள் போகும் வழியில் கருப்பு பூனை குறுக்கே வந்தால் அபசகுனமா? கருப்பு பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? என்பதை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க...

அறிவியல் வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் கூடவே, மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் நாம் வெளியே செல்லும்போது பூனை குறுக்கே செல்லக்கூடாது என்று நம்புகின்றனர். அவ்வாறு சென்றால் அது கெட்ட சகுனமாக கருதுகின்றனர். மேலும் தாங்கள் செல்லும் வழியில் பூனையை கண்டவுடன், சிறிது நேரம் நின்று வேறு எவராவது அப்பாதையைக் கடந்த சென்றவுடன் தான் கடந்து செல்கிறார்கள். கருப்பு பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? கருப்பு பூனை அபசகுனமாக கருதப்படுவது ஏன்? அதன் காரணங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.

ஜோதிடத்தின்படி, கருப்பு பூனை பொதுவாக சனி பகவானுடன் தொடர்புடையது. நீங்கள் செல்லும் வழியில் கருப்பு பூனையை கண்டவுடன், சிறிது நேரம் நின்று வேறு எவராவது அப்பாதையைக் கடந்த சென்றவுடன் தான் கடந்து செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்படி நீங்கள் சொல்வதன் மூலம் உங்களுக்கு எதிர்மறை பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

உங்கள் பாதையின் குறிக்க கருப்பு பூனை போவது சனி மற்றும் ராகு இருவரும் கோபமும் சேர்ந்து உங்கள் வலியை தடுக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சிறிது நேரம் கழித்து சென்றால் இவர்கள் இருவரும் கோபம் தணியும் என்று நம்பப்படுகிறது. கருப்பு பூனை தாங்கள் செல்லும் வழியில் குறுக்கிட்டால் இன்று வரை மக்கள் தங்களது பயணத்தை நிறுத்துவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கையில் எந்தெந்த மரத்தின் வேரை கட்டினால் நல்லது நடக்கும் தெரியுமா?

ஒரு கருப்பு பூனை கடக்கும்போது கெட்ட சகுனம்:

  • ஒரு கருப்பு பூனை நம் பாதையை கடக்கும்போது,   அது ஒரு சகுனம். கருப்பு என்பது சனி கிரகத்தை குறிக்கிறது. இந்த கிரகம் நமது பணிகள் மற்றும் முயற்சிகளில் தோல்விகளையும் தாமதங்களையும் ஏற்படுத்துகிறது. ஒரு கருப்பு பூனை பாதையை கடக்கும்போது,   குறிப்பிட்ட பணி பலனளிக்காது அல்லது தாமதமாகிவிடும் என்று அர்த்தம். சனி கிரகம் அவருக்கு சாதகமாக செயல்படவில்லை என்று அர்த்தம்.
  • அத்தகைய சகுனத்தை ஒருவர் அனுபவிக்க நேர்ந்தால், ஒருவர் சனி கிரகத்தின் தோஷங்களைத் தடுக்க கடவுளை மனதார பிரார்த்தனை செய்து, விநாயகப் பெருமானுக்கு தீபம் ஏற்றலாம்.
  • சகுண சாஸ்திரத்தின்படி, பயணம் செய்வதற்கு முன் பசு, மாடு, கன்று, குதிரை, யானை போன்றவற்றைப் பார்ப்பது நல்ல சகுனமாகும், ஆனால் பாதையின் குறுக்கே கருப்பு பூனை வந்தால் கெட்ட சகுனம்.
click me!