பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரத்தை கொண்ட நாடகத்தான் இந்தியா உள்ளது. அதிலும் தீபாவளி என்றாலே வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான புராண கதைகள் உண்டு. தீபாவளிக்கும் அப்படி நிறையக் கதைகள் உள்ளன.
தீபாவளி பண்டிகையானது தீமையின் வடிவாய் உருவான அசுரர்களை, கடவுள் அவதாரம் எடுத்து அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். அதிலும் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த புராணக்கதை என்றால் நராகாசுரன் கதை தான். மனிதன் என்பதற்கு நரன் என்ற அர்த்தம் உண்டு. மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிறைந்தவனாக இருந்ததால் நரகஅசுரன் என்று அழைக்கப்பட்டான் என்றும் நாளடைவில் அப்பெயரே நரகாசுரன் என மாறியது என்றும் கூறப்படுகிறது.
ராவண வதம்
ராமர் தனது மனைவி சீதை மற்றும் இளைய சகோதரர் லட்சுமணனுடன் லயோவில் அரக்கனை கொன்ற பின்னர் அயோத்திக்கு திரும்பினார் என்பது ஒரு வரலாறு. அப்படி அவர்கள் அயோத்திக்கு திருப்பும் போது அயோத்தி மக்கள் வீதிகளிலும், வீடுகளிலும் அவர்களை வரவேற்பதற்காக களிமண் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்தனர். ராவணன் என்ற அரக்கனை கொன்று வெற்றியுடன் தங்களது நாடு திரும்பியதன் நினைவாய் தான் தீபாவளி மிகுந்த ஆராவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.
நரகாசுரன் வதம்
பூமாதேவி மற்றும் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் ஆகிய வராஹா ஆகியோரின் மகன் தான் நரகாசூரன். அப்போது பூதேவி விஷ்ணுவை வேண்டி ஒரு வரம் பெற்றார். அதாவது நரகாசுரன் அனைத்திலும் சக்தி வாய்ந்தவன் ஆகவும், நீண்ட ஆயுள் பெற்றவன் ஆகவும் இருக்க வேண்டும் என்று. இந்த வரமும் அவனுக்கு கிடைத்த பலனால் வானத்தையும் பூமியையும் வென்றான். இதனால் அதிகளவில் கடவுள்கள் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட கடவுள்கள் அனைவரும் விஷ்ணுவிடம் சென்று நரகாசூரனின் அகங்காரத்தை தாங்கள் தான் அழிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
பாவங்களிலிருந்து விடுபட நீங்கள் சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த சிவ மந்திரங்கள்!
விஷ்ணுவும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொன்று, கிருஷ்ணர் அவதாரத்தில் நரகாசூரனைக் கொன்று விடுவேன் என்று உறுதியளித்து, நரகாசூரரைக் கொன்றார். மேலும் அவர் 16,000 பெண்களை விடுவித்து, அவர்கள் அனைவரையும் தன் மனைவி ஆக்கிக் கொண்டார். கிருஷ்ணரிடம், நரகாசூரன் மரணிப்பதற்கு முன்பாக தனது மரணத்தை பூமியில் கோலகலமாகக் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டார். கிருஷ்ணரும் அந்த வரத்தை அருளினார். அதுதான் இன்று தீபாவளி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
லட்சுமி தேவி மீட்பு
ஒருமுறை இந்த பூமியை ஆண்ட சக்தி வாய்ந்த மகாபலி மன்னர் அனைத்து கடவுள்களையும் தோற்கடித்து விட்டு லட்சுமி தேவியை அடிமைப்படுத்தி வைத்திருந்தான். அப்போது விஷ்ணு வாமனன் அவதாரத்தில் ஒரு குள்ள பிராமணனாக தோன்றி, உலகில் சில இடங்களை ஆள வேண்டும் என மகாபலி மன்னரிடம் கேட்டார். இதற்கு மன்னரும் அவரின் குரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனையை எதிர்த்து சம்மதித்தார். வாமனன் இந்த மூன்று உலகையும் வென்று, மகாபலி செய்த தவறுகளுக்காக அவன் தலையை கொய்தார். அதன்பின்னர் வாமனன் லட்சுமி தேவியை சிறையிலிருந்து மீட்டெடுத்தார். இந்நாளை தான் தற்போது வழிபடுகிறார்கள்.
தனம் தான்யம் பெருக்கி தரும் சப்த கன்னியர்கள்... வரலாறும்.. வழிபாடும்..
மகாவீரர் மோட்சம்
தீபாவளிக்கு சமண நூல்களின் படி ஒரு கதையுண்டு. அதாவது தர்மத்தைப் போதிக்கும் ஆசிரியரான இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கர பகவான் மகாவீரர் தீபாவளி தினத்தில் மோட்சம் அடைந்ததாகவும், அவரின் ஆன்மா ஒரு தூய்மையின் வடிவமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
பாண்டவர்கள் நாடு திரும்புதல்
மகாபாரதத்தின் படி, பாண்டவர்கள் 13 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்ட பிறகு ஹஸ்தினாபூருக்கு திரும்பினர். அப்போது அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாண்டவர்களை வரவேற்பதற்காக, தங்கள் வீடுகளில் மிண் விளக்குகளால் அலங்கரித்தார்கள்.
இப்படி நான் வருடந்தோறும் கொண்டாடி வரும் தீபாவளி பண்டிகைக்கு வேறு சில காரணங்களும்,புராணக்கதைகளும் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.