வாஸ்து படி, வீட்டில் பெயர் பலகை வையுங்கள்... அதிஷ்டம் கிடைக்கும்!

By Kalai Selvi  |  First Published Feb 15, 2024, 5:40 PM IST

வீட்டிற்கு வெளியே வைக்கப்படும் பெயர் பலகை வீட்டின் உறுப்பினர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுகிறது. எனவே, இது தொடர்பான சில விஷயங்களை பின்பற்றினால் வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு வரும்.


வாழ்க்கையில் பல நேரங்களில் சிரமங்கள் ஏற்படுகின்றன. அதில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினம். இதற்கு காரணம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷமே. வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை கொண்டு வருவதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாஸ்துவில், வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு.

அந்தவகையில், ஒருவரின் தலைவிதியை அவரது நெற்றியில் எழுதுவது போல, வீட்டின் பிரதான கதவு வீட்டின் தலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து வகையான பொருட்களும் எதிர்மறை மற்றும் நேர்மறை விளைவுகளை ஏற்படுகின்றன. அதுபோல், வீட்டின் வெளியே வைக்கப்படும் பெயர் பலகைகள் குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் விதிமுறைகள் உள்ளன. இந்த விதிகளை பின்பற்றினால் மகிழ்ச்சியும், செழிப்பும் வரும். ஏனெனில், பெயர் பலகை என்பது உங்கள் வீட்டின் அடையாளம் மட்டுமல்ல; அது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Latest Videos

undefined

மேலும், வாஸ்துபடி வீட்டிற்கு வெளியே வைக்கப்படும் பெயர் பலகை வீட்டின் உறுப்பினர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுகிறது. சில சமயங்களில் பெயர் பலகை தவறாக வைக்கப்பட்டால் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் ஏற்படும். எனவே, வீட்டிற்கு வெளியே பெயர் பலகை வைக்கும் முன் சில விஷயங்களில் மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதனால் வீட்டில் புகழ், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வரும்.

இதையும் படிங்க:  தவறுதலாக கூட உடைந்த கண்ணாடியை வீட்டில் வைக்காதீங்க.. துரதிர்ஷ்டம் துரத்தும்..தரித்திரம் பிடிக்கும்..ஜாக்கிரதை!

பெயர் பலகை வைக்கும் போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:

பெயர் பலகையின் நிறம்: பெயர் பலகை நிறம் என்ன என்பது மிகவும் முக்கியம். வீட்டின் திசைக்கு ஏற்ப பெயர் பலகை வைக்க வேண்டும். வடக்கு நோக்கி வீட்டில் சிவப்பு மற்றும் நீல நிறத்தை பயன்படுத்தக் கூடாது. மாறாக, வெளிர்மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தைத் தேர்வு செய்யலாம். குறிப்பாக, வீட்டு தலைவரின் ராசிக்கேற்ப பெயர் பலகையின் நிறம் இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

பெயர் பலகையின் திசை: நுழைவு வாயிலின் வலது புறத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும். அதில் இரண்டு வரிகளில் பெயரை எழுத வேண்டும். பெயர் பலகையில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் அமைப்பு தெளிவாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:  தெற்கு நோக்கிய வீடு: இதை மட்டும் செய்யுங்க ஆயுட்காலம் குறையாது!

பெயர் பலகையின் வடிவம்: வாஸ்துப்படி பெயர்பலகை எப்போதும் சுத்தமாகவும் சரியான அளவில் இருக்க வேண்டும். பெயர் பலகையின் வடிவம் செவ்வகமாக இருக்க வேண்டும். அதுபோல், பெயர் பலகையின் ஒரு பக்கத்தில் கணபதி அல்லது ஸ்வஸ்திகா சின்னத்தை வைக்கலாம்.

பெயர் பலகை உடைந்திருக்க கூடாது: பெயர் பலகையை உடைக்கவோ அல்லது ஓட்டைகள் இருக்கவோ கூடாது. வாஸ்துபடி, பெயர் பலகையில் சிலந்தி வலை போன்றவை இருக்க கூடாது. பெயர் பலகை உடைந்தால் அல்லது பழுதடைந்தால் உடனடியாக மாற்றவும். இல்லையெனில், வீட்டில் எதிர்மறை ஆற்றல் வரும்.

பெயர் பலகை எந்த உலோகத்தில் இருக்க வேண்டும்: வாஸ்து படி, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பெயர் பலகையை பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இது வீடு மற்றும் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!