மாசி சங்கடஹர சதுர்த்தி 2024 : தேதி, விரத வழிபாடு மற்றும் பலன்கள் குறித்த தகவல்கள்!!

By Kalai Selvi  |  First Published Feb 14, 2024, 11:25 AM IST

சங்கடஹர சதுர்த்தி அன்று சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


இந்து மதத்தில் விநாயகருக்கு தனி சிறப்பு உண்டு. எந்த ஒரு செயலையும் செய்யும் முன் அவரே அதற்கு தொடக்கமாக இருக்கிறார். அவரை வழிபட்டு பிறகுதான் இந்து சமய மக்கள் தங்கள் காரியங்களைத் தொடங்குவார்கள். விநாயகருக்கு திங்கள், வெள்ளி தான் உகந்த நாட்களாகும். திதி என்றால்  சதுர்த்தி திதி அவருக்கு ஏற்றது என்பார்கள் நம் முன்னோர்கள். அந்தவகையில், மாசியில் வரும் சங்கடாஹர சதுர்த்தி மிகச்சிறப்பு வாய்ந்தது. வினை தீர்க்கும் விநாயகரை வணங்க ஏற்ற தினம் எதுவென்றால், அது 'சங்கடஹர சதுர்த்தி' ஆகும். எனவே, இந்நாளில் விநாயகரை முழுமனதோடு வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். 

2024 சங்கடஹர சதுர்த்தி எப்போது? 
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வணங்க ஏற்ற நாள் ஆகும். வளர்பிறை சதுர்த்தி அன்று வானில் சந்திரனை காண்பது அல்லது 4ஆம் பிறையை காண்பது கேடு வரும் என்று பெரியோர் வாக்கு. ஆனால், 
பௌர்ணமிக்குப் பின் வரும் தேய்பிறை சதுர்த்தி இன்னும் கூட மகிமை வாய்ந்தது. அதுதான் சங்கடஹர சதுர்த்தி ஆகும். 

Tap to resize

Latest Videos

மாசி சங்கடஹர சதுர்த்தியானது பிப்ரவரி 28ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அதாவது தமிழ் மாதமான மாசி மாதம் 16ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதுபோல், சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலையில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் தாலியில் இருக்கும் மஞ்சள் கயிற்றை மாற்றினால், சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கட என்பதற்கு துன்பம் என்றும் ஹர என்பதற்கு அழித்தல் என்றும் பொருள்.அதாவது நம் துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதமாகும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் 4ஆம் நாள் சதுர்த்தி திதி தான் மாத சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

இதையும் படிங்க: Masi Month 2024 Specials : மாசி மாதத்தின் முக்கிய விசேஷங்கள் மற்றும் விரத நாட்கள் பற்றி தெரியுமா..?

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை எப்படி வழிபட வேண்டும்? 
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு முன் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொள்வார்கள். இதுதான் சதுர்த்தி வழிபாட்டு வழக்கமாக இருந்து வருகிறது. 'தோர்பிகர்ணம்' என்ற சொல்லே 'தோப்புக்கரணம்' என அழைக்கப்படுகிறது. 'தோர்பி' என்றால் 'கைகளில்' என்று பொருள். 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன் முழுப்பொருளாகும். 

இதையும் படிங்க:  மாசி மாத ராசி பலன்கள் 2024: கும்ப ராசியில் சூரியன் சஞ்சாரம்.. இந்த 6 ராசிகள் அதிஷ்டசாலிகள்!!

விநாயகருக்கு நைவேத்தியம்:
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு நைவேத்தியமாக மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், அப்பம், கொழுக்கட்டை, சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவற்றை விநாயகருக்கு படைத்து அவரை வழிபட வேண்டும். அதுபோல் அவரை வழிபடும் முன் அவருக்கு ரொம்பவே விருப்பமான அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை ஆகியவையும், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ போன்ற பூக்களை வைத்து வழிபடுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் என்ன?
ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவற்றின் பிடியில் இருப்போருக்கு ஆனைமுகன் அருள் கிடைத்து விடுதலை அடைவார்கள். மேலும், சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை மனதார 
வேண்டிக் கொண்டால் வீட்டில் செல்வம் பெருகும், செய்யும் தொழில் விருத்தியடையும், குழந்தை பாக்கியம் உண்டாகும், செய்யும் காரியம் வெற்றி பெறும், ஞானம் கிடைக்கும். அதுபோல், சதுர்த்தி தினம் அன்று விநாயகருக்கு எள் உருண்டை நெய்வேத்தியம் செய்தால் சனி பகவானின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

click me!