Masi Month 2024 Specials : மாசி மாதத்தின் முக்கிய விசேஷங்கள் மற்றும் விரத நாட்கள் பற்றி தெரியுமா..?

By Kalai Selvi  |  First Published Feb 13, 2024, 11:38 AM IST

மாசி மாதம் 2024 பண்டிகைகள் மற்றும் விரதம் தேதிகளின் பட்டியல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு மாதத்திற்கும் தனி சிறப்புகள் உண்டு. ஆனால் தமிழ் மாத காலண்டர் படி மாசி மாதம் மிகவும் விசேஷமானது என்று சொல்லலாம். ஏனெனில், இம்மாதத்தில் தான் அனைத்து தெய்வத்தையும் வழிபடவும், அனைத்து விதமான நலன்களைப் பெறவும் உகந்த மாதம் என்று சொல்வார்கள். 

மாசி மாதம் தமிழ் மாதங்களில் 11 வது மாதமாக கருதப்படுகிறது. இது வழிபாட்டிற்குரிய சிறந்த மாதம் என்று சொல்வார்கள். மாசி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் மிகவும் சிறப்பானது, அதிலும் விரத நாட்கள் மிகவும் விசேஷமானது என்று சொல்லலாம். இம்மாதத்தில் தான் மாசி மகம், மகா சிவராத்திரி, காதலர் தினம் போன்றவை கொண்டாடப்படுகிறது. எனவே இப்போது மாசி மாதத்தில் வரும் விரதம் மற்றும் பண்டிகைகளின் தேதிகளின் குறித்து பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  மாசி மகம் 2024 : தேதி, நேரம் மற்றும் இந்த நாளின் சிறப்புகள் என்ன..?

மாசி மாதம் 2024 விரதம் மற்றும் திருவிழாக்கள்:
மாசி மாதம் 2024 பண்டிகைகள் மற்றும் விரதம் தேதிகளின் பட்டியல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..

  • பிப்ரவரி 13 செவ்வாய் - சதுர்த்தி விரதம், கும்ப சங்கராந்தி, விஷ்ணுபதி புண்யகாலம், கணேஷ் ஜெயந்தி
  • பிப்ரவரி 14 புதன் - வசந்த பஞ்சமி, சபரிமலை நடை துறப்பு, காதலர் தினம்
  • பிப்ரவரி 15 வியாழன் - ஷஷ்டி விரதம்
  • பிப்ரவரி 16 வெள்ளி - கார்த்திகை விரதம், ரத சப்தமி, பீஷ்ம அஷ்டமி
  • பிப்ரவரி 20 செவ்வாய் - ஏகாதசி
  • பிப்ரவரி 21 புதன் - பிரதோஷம்
  • பிப்ரவரி 24 சனி - பௌர்ணமி, பௌர்ணமி விரதம், மாசி மகம்
  • பிப்ரவரி 28 புதன் - சங்கடஹர சதுர்த்தி, தேசிய அறிவியல் தினம்
  • மார்ச் 08 வெள்ளி - திருவோண விரதம், மாச சிவராத்திரி, பிரதோஷம், மகா சிவராத்திரி, சர்வதேச மகளிர் தினம்
  • மார்ச் 10 சூரியன் - அமாவாசை
  • மார்ச் 11 திங்கள் - சந்திர தரிசனம், ஸ்ரீ சோமவர விரதம், ரமலான் நோன்பு ஆரம்பம்
  • மார்ச் 13 புதன் - சதுர்த்தி விரதம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!