சிலருக்கு பரிகாரம் செய்தும் அதற்கான பலன்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அது ஏன் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே இந்து மதத்தில், கடன் தீர, கண்திருஷ்டி நீங்க, திருமணம் அமைய, குழந்தை பாக்கியம் கிடைக்க, வியாபாரம் பெருக, கல்வி அறிவு பெருக, வேலை கிடைக்க, செல்வ செழிப்புடன் வாழ என இப்படி சொல்லி கொண்டே போகும் அளவிற்கு பல உள்ளன. அவை அனைத்தையும் பெற ஜோதிடத்தில் பரிகாரங்களும் உள்ளது. இப்படி தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக மக்கள் எல்லாருமே பரிகாரம் செய்கிறார்கள். ஆனால், அதில் பல பரிகாரங்கள் சிலருக்கு பலிப்பதில்லை. எனவே, இந்த கட்டுரையில் அதற்கு காரணம் என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்..
சிலருக்கு பரிகாரம் பலன் தருவதில்லை ஏன்?
எல்லாரும் நினைத்தது நடக்க பரிகாரம் செய்வது வழக்கம். ஆனால் நாம் நினைத்த நாட்கள் அல்லது நமக்கு வசதியான நாட்களில் பரிகாரம் செய்வது மிகவும் தவறு. மேலும், ஜாதகத்தில் நம்முடைய நட்சத்திரத்திற்கு எந்த தினம் நல்ல பலனோ அந்த நாளில் தான் பரிகாரம் செய்ய வேண்டும். அதுபோல், நீங்கள் எந்த தேவதைக்கு பரிகாரம் செய்கிறீர்களோ, அந்த தேவதைக்கு உகந்த நாளில் செய்ய வேண்டும்.
எல்லா நாளும் கடவுளுக்கு உகந்த நாள் என்று நினைத்து, நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப பரிகாரம் செய்தால் கண்டிப்பாக அந்தப் பரிகாரம் பலிக்காது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அதுபோல, முழுமனதுடன் செய்யும் பரிகாரங்கள்தான் பலன் தரும். கடமைக்கு செய்யும் பரிகாரம் ஒருபோதும் பலிக்காது. பொதுவாகவே, நட்சத்திரத்தில் மூன்றாவது நட்சத்திரம் விபத்து. எனவே, அந்த நாளில் பரிகாரம் செய்தால் நிச்சயமாக பலன் கிடைக்காது மற்றும் சில துன்பங்கள் உங்களுக்கு நேரிடும். அதுமட்டுமின்றி, உங்கள் நட்சத்திரத்தில் ஐந்தாவது, எழாவது நட்சத்திரத்தில் பரிகாரம் செய்யாதீர்கள். நீங்கள் செய்யும் காரியம் நாசமாகும் மற்றும் வாழ்நாள் முழுக்க துன்பத்தை தான் அனுபவிப்பீர்கள்.
இதையும் படிங்க: நீங்கள் கேட்டதை கொடுக்கும் கல் உப்பு பரிகாரம்... 48 நாளுக்குள் நினைத்தது நடக்கும்.. நம்புங்க!
நீங்கள் ஒருபோதும் பரிகாரத்தை நதிக்கரையில் செய்யாதீர்கள். ஏனெனில், சில மாதங்கள்தான் அப்படி செய்வதற்கு உகந்த மாதங்கள். உதாரணமாக, சித்திரை மாதம் அமாவசைக்கு அடுத்து ஒருமாதம் முழுவதும் அதாவது முப்பது நாட்கள் நதிக்கரையில் பரிகாரம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேசமயம், உங்கள் நட்சத்திரம் உங்களுக்கு நல்ல நட்சத்திரமாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதுபோலவே, ஐப்பசி, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவசைக்கு அடுத்த ஒரு மாதமும் பரிகாரத்திற்கு உகந்தது மற்றும் அந்த காலத்தில் செய்யும் பரிகாரம் வெற்றியைத் தரும்.
இதையும் படிங்க: தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள் இதோ!!
முக்கிய குறிப்பு: பரிகாரம் செய்வதற்கு உகந்த நாட்கள் இல்லாத நாட்களில் செய்யும் பரிகாரம் எந்த பலன்களையும் உங்களுக்கு வழங்காது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அதையும் மீறி உங்களுக்கு நல்லது நடந்தால் அது உங்கள் ஜாதகத்தால் கிடைத்த பலனாகும். எனவே, நீங்கள் பரிகாரம் செய்யும் முன் உங்களது நட்சத்திரத்திற்கு ஏற்ற நாளில் செய்யுங்கள், அப்போதுதான் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D