Hanuman Jayanti 2024 : நாளை அனுமன் ஜெயந்தி.. சுப நேரம் மற்றும் வழிபாட்டு முறை இதோ..!

By Kalai Selvi  |  First Published Apr 22, 2024, 10:30 PM IST

நாளை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. எனவே, மங்களகரமான நேரம் மற்றும் வழிபாட்டு முறை என்ன என்பதை  இந்த பதிவில்  அறிந்து கொள்ளலாம் வாருங்கள்..


ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பௌர்ணமி அன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. காரணம் அனுமன் இன்னும் பூமியில் இருக்கிறார் என்று இந்து மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் இவரது பெயரை சொன்னால் துக்கங்கள், தொல்லைகள், பேய்கள் ஓடிவிடும் என்பது ஐதீகம். அந்த வகையில், இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி எந்த நாளில் வருகிறது..? அவரை வழிபட மங்களகரமான நேரம் மற்றும் முறை என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

2024 அனுமன் ஜெயந்தி எப்போது?: 
இந்து நாட்காட்டியின்படி, சித்திரை பெளர்ணமி அன்று அதாவது நாளை 23 ஏப்ரல் 2024 அன்று அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி, 24 ஏப்ரல் 2024 அன்று அதாவது மறுநாள் காலை 05:18 மணிக்கு முடிவடையும். இத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஏப்ரல் 23 ஆம் தேதி செவ்வாய்கிழமை, அதாவது நாளைய தினம் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் அனுமன் ஜெயந்தி வந்தால், அதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

Tap to resize

Latest Videos

2024 அனுமன் ஜெயந்தியின் நல்ல நேரம்:
அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட இரண்டு நல்ல நேரங்கள் உள்ளன. அதாவது, முதல் சுப நேரம் காலையிலும், இரண்டாவது நேரம் இரவிலும் இருக்கும். 

  • முதல் சுப நேரம் : 23 ஏப்ரல் காலை 09:03 முதல் மதியம் 01:58 வரையும்
  • இரண்டாவது சுப நேரம் : 23 ஏப்ரல் இரவு 08:14 முதல் 09:35 வரையும் இருக்கும்.

இதையும் படிங்க:  இன்று அனுமன் ஜெயந்தி! இந்த ரெண்டெழுத்து நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு, சிறப்பான பலன்கள் உண்டு!

2024 அனுமன் ஜெயந்தி பூஜை விதி:
நாளை அனுமன் ஜெயந்தி என்பதால், அதிகாலையிலேயே எழுந்து, நீராடி பிறகு, அனுமனை வழிபட உறுதிமொழி எடுக்கவும். மங்களகரமான நேரத்தைக் கடைப்பிடித்த பின்னரே அனுமனை வழிபட வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அதன்பிறகு, வடகிழக்கு திசையில் உள்ள தூணில் சிவப்பு துணியை விரித்து, அதன் மேல் அனுமான் உடன் ராமர் இருக்கும் படத்தையும் வைக்க வேண்டும். பிறகு அனுமானுக்கு சிவப்பு மலர்களையும் ராமருக்கு மஞ்சள் பூக்களையும் அர்ப்பணிக்க வேண்டும். மேலும் லட்டுகள், துளசி, பருப்பும் வழங்க வேண்டும். முதலில் ராமரின் மந்திரத்தை சொல்லி உச்சரித்த பிறகு, அனுமனின் மந்திரத்தை சொல்லி வணங்க வேண்டும்.

இதையும் படிங்க:  Hanuman Jayanthi 2024: இதனால் தான் அனுமனுக்கு வெற்றிலையும், வெண்ணையும் பிடிக்குமாம்.. இதை செய்ய மறக்காதீங்க..

பரிகாரம்:
அன்று பரிகாரம் செய்ய முதலில், ஆலமரத்தின் இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து, அதை அனுமன் படத்திற்கு முன் வைக்க வேண்டும். நீங்கள் பூஜை செய்து முடித்த பிறகு இந்த இலையில் குங்குமத்தால்  ராமரின் பெயரை எழுத வேண்டும். பிறகு எல்லா விதமான பூஜைகள் முடிந்ததும், இந்த இலையை உங்கள் பணப்பையிலோ அல்லது உங்கள் வீட்டில் பணம் இருக்கும் இடத்திலோ  வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் நிதி நிலைமை மேம்படும் என்பது ஐதீகம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!