குஜராத்தில் உள்ள ராம்நாத் சிவ் கேலா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுத்தி வழிபடுகிறார்கள்.
இந்துக் கோயில்களில் கடவுளுக்கு காணிக்கையாக பால், பழங்கள், பூக்கள், தேங்காய், இனிப்புகள் போன்றவற்றை காணிக்கையாகப் படைப்பது வழக்கம். ஆனால், ஒரு கோயிலில் இறைவனுக்கு நண்டுகளைப் படைக்கிறார்கள்.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராம்நாத் சிவ் கேலா என்ற சிவன் கோவில் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாப் படைப்பது வழக்கம். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளிலிருந்து நண்டு பூஜை நடைபெறும்.
இந்த வருடம் கடந்த ஞாயிறு முதல் சிவனுக்கு நண்டுகளைக் காணிக்கையாக வழங்கத் தொடங்கியுள்ளனர். ஏராளமான பக்தர்கள் உயிருடன் இருக்கும் நண்டுகளைக் கொண்டுவந்து சிவனுக்குச் செலுத்தி வழிபாடு செய்துவருகிறார்.
இப்படிச் செய்வதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக காது கேளாமை, காது வலி, செவித்திறன் குறைபாடு போன்ற காது தொடர்பான நோய்கள் குணமாகும் என்று நம்புகிறார்கள்.
Sabarimala: வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சபரிமலை ஐயப்பனின் வருவாய்!
| Devotees offer crabs to Lord Shiva at Ramnath Shiv Ghela temple in Gujarat's Surat (18.01) pic.twitter.com/E66MoglQEX
— ANI (@ANI)“இந்தக் கோயில் பற்றி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. ராமரே இந்தக் கோயிலைக் கட்டினார். அப்போது, இந்தக் கோயிலில் ஏகாதசி நாளில் நண்டுகளை வைத்து வழிபடும் அனைவருக்கும் நினைத்த காரியம் நடந்து நன்மை உண்டாகும் என்று அருளினார்.” என்று அந்தக் கோயிலின் பூசகர் மனோஜ்கிரி கோஸ்வாமி தெரிவிக்கிறார்.
“இந்த கோவிலில் நண்டுகளைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டால் தங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறி, நல்வாழ்வு வாழலாம் என்று நம்புகின்றனர். நண்டு அர்ச்சனை செய்தவர்களின் உடல்நலக் குறைபாடுகள் குணமானதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் எனக்கு இருக்கும் நோய் குணமாகப் பிரார்த்தனை செய்யலாம் என்று வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார் கோயிலுக்கு வந்த பக்தர் ஹீரல் சாபுவாலா.
“இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நண்டு காணிக்கை செலுத்தப்படுகிறது. இங்கு நண்டுகளைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபடுவதால் குழந்தைகளுக்கு காது வலி வராது என நம்புகிறோம்'' என்கிறார் மற்றொரு பக்தர் புஷ்பா.
குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி படாமல் இருக்க கட்டாயம் கண்மை வைக்கணுமா? உண்மை பின்னணி என்ன?