அனைவருக்கும் தெரிந்த இந்த காயத்திரி மந்திரத்திற்கு சாவித்திரி என்றும் பெயர். உலகில் இந்த காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரமே கிடையாது
பொதுவாகவே நாம் வணங்கும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு மந்திரம் உள்ளது. அதனால் நாம் கடவுளை வணங்கும் போது, வெறுமனே வணங்காமல் அவர்களுக்கான மந்திரத்தை கூறி வணங்கினால் அதற்கான பலன்களை நம்மால் முழுமையாக அடைய முடியும். அப்படி கடவுள்களுக்கு இருக்கும் பல மந்திரங்களில் ஒன்று தான் காயத்திரி மந்திரம்.
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத்ஸவி துர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ந:ப்ரசோ தயாத்
இது அனைவருக்கும் தெரிந்த இந்த காயத்திரி மந்திரத்திற்கு சாவித்திரி என்றும் பெயர். உலகில் இந்த காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரமே கிடையாது. அதாவது இந்த மந்திரத்திற்கு அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானித்து வருகிறோம் என்பது மட்டுமின்றி, பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்த சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது தான் இதன் பொருள்.
அதோடு காயத்ரி என்பதற்கு தன்னை வணங்குவரை காப்பாற்றுவது என்பதே பொருள். நமக்கு வரும் எல்லாவித ஆபத்துக்களும் நீங்க காயத்ரி மந்திரத்தை ஜபித்து வரலாம். காயத்ரி மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள். இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காக, நடுப்பகலில் சாவித்ரிக்காக மற்றும் மாலையில் சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. விஸ்வாமித்திரர் தான் இந்த மந்திரத்தை பூமிக்கு அறிமுகப்படுத்தியவர். அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையில் இருந்தபோது இதனைக் கண்டறிந்தார். காயத்ரி மந்திரத்தினை காலை, மதியம் மற்றும் மாலை சந்தியா வந்தனம் செய்து வரும் பிராமணர்கள் ஜபிக்கின்றனர்.
குல தெய்வ வழிபாடு எப்படி இருக்கணும்னு தெரியுமா?
காயத்ரி என்ற ஒளியின் அளவை வைத்து தான் இந்த மந்திரத்தை இயற்றியதாய் கூறப்படுகிறது. எல்லா மந்திரங்களுக்கும் தாய் மந்திரமாய் இருக்கும் காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களை கொண்டது. இது சூரிய வழிபாட்டை குறிக்கிறது. தினம் காலை நேரத்தில் நமது கைகளை முகத்திற்கு நேரமாக் கூப்பி, கிழக்கு பக்கமாக பார்த்து மனதை அலைபாய விடாமல் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இதுவே நண்பகல் என்றால் கிழக்கு பக்கம் மறந்து கைகளை மார்பகத்திற்கு எதிரே கூப்பியும், மாலை நேரம் என்றால் மேற்கு பக்கமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பியும் ஜெபிக்க வேண்டும்.
நாம் அனைவரும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதற்காகவும், இந்த உலகத்தில் வாழும் வரை செல்வாக்குடன் இருந்திடவும், நமது உள்ளம் தூய்மையடையும், நம்மை எந்த ஆபத்துக்கள் நெருங்காமல் இருந்திடவும் காயத்ரி மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை தினமும் சொல்ல வேண்டும். இல்லையென்றால் குறைந்தது 27 முறையாவது மந்திரத்தை கூற வேண்டும். காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது ஒரே மூச்சாக உச்சரித்து விடாமல் 'ஓம்' என்ற பிரணவத்தில் நிறுத்தி, இரண்டாவது வியாஹ்ருதிகளான பூர்:புவ:ஸ்ஸூவ என்பதில் நிறுத்தி, மூன்றாவதாக தத்ஸவி துர்வரேண்யம்
என்ற முதல் பாதத்தில் நிறுத்த வேண்டும். பின்னர் நான்காவதாக, பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்று இரண்டாவது பாகத்திலும், ஐந்தாவதாக தியோயோ நப்ரசோ தயாத் என்று மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.
காயத்ரிக்குத் தான் மந்திர வழிபாட்டில் முதல் இடம். அதனால் தினந்தோறும் காயத்ரி மந்திரத்தினை உச்சரித்தால் மனதில் நினைத்த காரியம் வெற்றி பெற்று, வாழ்க்கையில் அனைத்து சந்தோஷமும் கிடைத்திடும்.