வீட்டில் நாம் செய்யும் தவறுகள் குடும்பத்தை பொருளாதார ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கும். இத்தகைய தோஷங்களில் இருந்து விடுபட சில வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும். இதில் ஒன்று. இரவில் படுக்கும் முன் பின்பற்ற வேண்டிய சில வாஸ்து குறிப்புகள்...
குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவு மற்றும் வீட்டின் நிதி நிலை ஆகியவற்றில் வாஸ்து செல்வாக்கு செலுத்துவதாக நம்மில் பலர் நம்புகிறோம். மிக முக்கியமாக, இந்தியர்களையும் வாஸ்துவையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது. அதனால்தான் பலர் வாஸ்துவை தவறாமல் பின்பற்றுகிறார்கள். வீட்டின் அஸ்திவாரம் முதல் முழு கட்டமைப்பு முடியும் வரை பக்கா வாஸ்து படி தான் இருக்க வேண்டும் என்று உறுதி செய்கிறார்கள்.
வாஸ்து வீட்டின் கட்டுமானத்தில் மட்டுமல்ல, வீட்டின் நிலைமைகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது. தெரியாமல் செய்யும் சில தவறுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டில் நாம் செய்யும் தவறுகள் குடும்பத்தை பொருளாதார ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கும். இத்தகைய தோஷங்களில் இருந்து விடுபட சில வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும். இதில் ஒன்று தான் இரவில் படுக்கும் முன் பின்பற்ற வேண்டிய சில வாஸ்து குறிப்புகள்.
undefined
இதையும் படிங்க: தெற்கு நோக்கிய வீடு: இதை மட்டும் செய்யுங்க ஆயுட்காலம் குறையாது!
இரவில் உறங்கச் செல்வதற்கு முன் சில வகையான வேலைகளைச் செய்வது, வீட்டில் பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதோடு, குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்தும். இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டியவை என்ன?
இதையும் படிங்க: உங்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லையா? அப்போ உங்கள் படுக்கைக்கு அடியில் இத மட்டும் வையுங்கள்!
இரவில் படுக்கும் முன், முடிந்தால், கை, கால்களைக் கழுவி, பூஜை அறையில் தீபம் ஏற்றவும். அசைவம் சாப்பிட்டால் தீபம் ஏற்றக்கூடாது. வீட்டில் பூஜை அறை இருட்டாக இருக்கக் கூடாது என்கின்றனர் வாஸ்து பண்டிதர்கள். குறிப்பாக, விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தூங்கும் முன் வீட்டில் கற்பூரத்தை எரிப்பதால் வீட்டில் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நீங்கும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். இரவில் கற்பூரத்தை பற்ற வைத்து அவற்றின் புகையை படுக்கையறை மற்றும் வீடு முழுவதும் பரவ வேண்டும்.
இரவில் படுக்கும் முன் வீட்டின் தெற்குப் பகுதியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும். முன்னோர்கள் இந்த திசையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திசையில் தீபம் ஏற்றுவது நல்லது. தீபம் ஏற்ற முடியாத பட்சத்தில் சிறிய விளக்கைக் கூட இந்த திசையில் ஏற்றி வைக்க வேண்டும்.
இரவில் வீட்டின் முன் கதவு சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். லட்சுமி தேவி வீட்டின் பிரதான நுழைவாயிலிலிருந்து நுழைவதாக நம்பப்படுகிறது. எனவே இந்த திசையில் செருப்பு மற்றும் காலணிகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி.. வீட்டில் வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகள் மிகவும் விரும்பப்படுகின்றன. இந்த திசைகள் குபேரனின் திசையாக கருதப்படுகிறது. அதனால்தான் இரவில் படுக்கும் முன் வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளை சுத்தம் செய்ய வேண்டும்.