திருவாரூர் தேரோட்டம் எதற்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா.? நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.!!

By Raghupati R  |  First Published Apr 1, 2023, 12:57 PM IST

திருவாரூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜசுவாமி கோவில் சோழர் காலத்திலிருந்தே வரலாற்று சிறப்பு மிக்கது.


திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும் ஆகும். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். சைவ சமய மரபின் தலைமை பீடம் என இக்கோயில் போற்றப்படுகிறது. 

கோயில் 5 வேலி, குளம் 5 வேலி என கோயிலுக்கு நிகரான பரப்பில், இதன் திருக்குளம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இக்கோயிலில் நடைபெறக்கூடிய ஆழித்தேர்த் திருவிழா உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது. பண்டைய காலங்களில்  இந்த பிரம்மாண்ட தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப்பட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

அதன்பின், ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி தேரை நகர்த்தியுள்ளனர்.ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. 

ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாக இருக்கும். திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேேராட்டம் இன்று பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு தொடங்கியது.  இதனுடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது.

இதையும் படிங்க..Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

இதற்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு ஆழித்தேரின் முன்பு இந்த தேர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்தத் தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இந்தத் தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், ஐந்து டன் பனை மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இக்கோயிலின் பழைமையான தேர், 1925-ம் ஆண்டு எரிந்து போனதால், 1930-ல் புதிய தேர் செய்யப்பட்டு, 145-ம் வருடம் வரை ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர். பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு தேர் உருவானது இந்தத் தேர். அதனாலேயே இது ஆழித்தேர் அதாவது கடல் போன்ற தேர் என்று பேர் ஆனதும் என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்

click me!