உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் தொடங்கியது.. பக்தர்கள் பக்தி பரவசம் !!

By Raghupati R  |  First Published Apr 1, 2023, 8:06 AM IST

உலகப் புகழ் பெற்ற ஆழித் தேரோட்டம் திருவாரூரில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆகும். சுமார் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர், திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். 

ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாக இருக்கும். திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேேராட்டம் இன்று பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு தொடங்கியது. 

Latest Videos

undefined

இதனுடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு ஆழித்தேரின் முன்பு இந்த தேர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்தத் தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இந்தத் தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், ஐந்து டன் பனை மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறைவனை வழிபட்டனர்.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்

click me!