கடப்பாவை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க தாமரை மலர்களை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உலகின் பணக்கார கடவுளாக இருப்பவர் திருப்பதி ஏழுமலையான். திருப்பதி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பேர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதிக்கு சென்று வந்தால், திருப்பம் ஏற்படும், கேட்டதை கொடுக்கும் கலியுக தெய்வம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றாலும், பக்தர்கள் மன திருப்தியுடன் திரும்பி செல்கின்றனர். மேலும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துவிட்டு தங்களால் இயன்ற அளவுக்கு காணிக்கை செல்த்தி வருகின்றனர். அதே நேரம் அம்பானி போன்ற பெரும்பணக்காரர்கள் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும், லட்சக்கணக்கான பணத்தையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
உருளியில் தண்ணீர் வைக்கும் போது இதையும் சேர்த்தால்.. வீட்டில் பணமழை கொட்டும்..
அந்த வகையில் தற்போது கடப்பாவை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க தாமரை மலர்களை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் திருப்பதி கோயிலில் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை நடைபெறும். இந்த சேவைக்காக பிரபல லலிதா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் பிரத்யேக வேலைப்பாடுகளுடன் 108 தங்கத் தாமரை மலர்கள் தயாரிக்கப்பட்டன.
நேற்று இந்த தங்க தாமரை மலர்களை கடப்பாவை சேர்ந்த பக்தரும், லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவரும் இணைந்து திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தினர். விஐபி தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்த பிறகு தங்க தாமரை மலர்களை அர்ச்சர்களிடம் கொடுத்து சாமியின் பாதத்தில் வைத்து ஆசி பெற்றனர். பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் தங்க தாமரை மலர்கள் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.827 கோடி வசூலாகி உள்ளது. திருப்பதி கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.1000 கோடி கிடைப்பதால் தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை மற்றும் தங்கத்தின் இருப்பு அதிகரித்துள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிரமோற்சவம் நடைபெறும் என்பதால் பக்தர்களின் வருகையும் அதிகரிக்கும். இதனால் உண்டியல் காணிக்கை வருமானமும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.