உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கா?? இல்லையெனில் இது மட்டும் செஞ்சா போதும்.!!

By Kalai Selvi  |  First Published Jul 3, 2023, 3:55 PM IST

உங்கள் வீட்டில் குலதெய்வம் இல்லை என்று நீங்கள் உணர்ந்தால் அறிய சில விஷயங்களை செய்வதன் மூலம் குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கும்.


உங்கள் வீட்டில் குலதெய்வம்  இருக்கிறதா இல்லையா என்று அறிய சில எளிய பரிசோதனைகளை நீங்கள் செய்து பார்க்கலாம். குலதெய்வம் மட்டுமல்ல வேறு எந்த ஒரு நல்ல சக்திகளும் இல்லாத வீட்டில் எந்தவொரு உயிரினங்களும் வசிக்காது.

  • குறிப்பாக பல்லி போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் தெய்வ சக்தி இருப்பதாக நீங்கள் உணரலாம். அதுபோலவே, கவ்லி கத்தும் சத்தம் அடிக்கடி உங்கள் வீட்டில் கேட்டால் குலதெய்வம் இருப்பதாக நீங்கள் அறியலாம்.
  • உங்கள் வீட்டில் அடிக்கடி விபூதி வாசம் அல்லது கற்பூரவாசம் வீசினால் குலதெய்வம் இருக்கும். குறிப்பாக நீங்கள் எந்த ஒரு பூஜையும் செய்யாத நிலையில், இந்த வாசனை வீசினால் குலதெய்வம் இருப்பதாக உணரலாம்.

இதையும் படிங்க: “நான் எப்போதும் உங்களுக்காகவே இருக்கிறேன்” - சத்குருவின் குரு பெளர்ணமி வாழ்த்து செய்தி!

Tap to resize

Latest Videos

தங்களது வீட்டில் குளதெய்வமும், குலதெய்வம்  ஆசிர்வாதமும், இல்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த ஒரு எளிய பரிகாரத்தை தினமும் செய்து வந்தால் குலதெய்வத்தை எளிதாக வீட்டில் வரவழைத்து விடலாம்.

  • அதற்கு முதலில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வெறும் தண்ணீரால் வாயை கொப்பளித்து முகம் கழுவி கொள்ளவும். பிறகு வீட்டு வாசல் முன் இரண்டு கற்பூரத்தை ஏற்றவும்.
  • கற்பூரம் முழுமையாக எரிந்து அணைந்த பின்பு தான் வழக்கமான வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும்.
  • அதுபோல் நீங்கள் காக்கைக்கு சாதம் வைக்கும் போது அவைகள் அதனை  உடனே வந்து எடுத்து சாப்பிட்டால் பித்ருக்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
  • அதுவே அவைகள் சிறிது நேரம் கழித்து உங்கள் வீட்டை சுற்றி முற்றி பார்த்துவிட்டு எடுத்து சாப்பிட்டால் வீட்டில் குலதெய்வம் இருக்கு என்று அர்த்தம்.
  • ஒருவேளை நீங்கள் வைத்த உணவை காக்கைகள் சாப்பிடவில்லை என்றால் உங்கள் வீட்டில் பித்ருக்கள் மற்றும் குலதெய்வ ஆசிர்வாதம் இல்லை.
click me!