தீபாவளி திருநாள் அன்று செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள் சில இருக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நாட்டின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் அழிக்கப்பட்ட இந்த நன்னாளில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொதுவாக தீபாவளி அன்று காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளிப்பது. புத்தாடை அணிவது, பலகாரங்கள் சாப்பிடுவது, பட்டாசு வெடிப்பது என தீபாவளி முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். ஆனால் தீபாவளி திருநாள் அன்று செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள் சில இருக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
தீபாவளி நன்னாளி அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் சிலர் அதிகாலையில் எழாமல் வெகுநேரம் தூங்குவார்கள் இப்படி செய்யக்கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும். எனவே தீபாவளி அன்று அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து நல்லெண்ணெய் வைத்து, அரப்பு தேய்த்து குளிக்க வேண்டும். மேலும் வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ண்யில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அரப்புப் பொடியில் சரஸ்வதி தேவி வாசம் செய்கிறார். சந்தனத்தில் பூமாதேவி நிறைந்திருப்பதாக ஐதீகம். மஞ்சள் கலந்த குங்குமத்தில் கௌரி தேவி வாசம் செய்கிறார். எனவே தீபாவளியன்று அதிகாலை எழுந்து நல்லெண்ணயை உடல் முழுவதும் பூசி, காய விட்டு வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் எண்னெய் ஸ்நானம் செய்வதால் கங்கை ஸ்நானம் செய்வதற்கு சமம்.
நரகாசுரனை வதம் செய்த தினம் என்பதால் அரப்பு பொடி கொண்டு தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். சந்தனமும், மஞ்சள் கலந்த குங்குமத்தையும் நெற்றியில் கட்டாயம் இட வேண்டும். இவற்றை முறையாக கடைபிடித்து தீபாவளி நாளை தொடங்குவது நல்லது.
அதே போல் புத்தாடை இல்லாமல் தீபாவளி பண்டிகை இருக்காது. வீட்டில் உள்ள அனைவரின் புத்தாடைகளை சாமி படத்தின் முன்பு வைத்து, வழிபட்டு மஞ்சள் வைத்த பிறகு தான் அணிய வேண்டும். தீபாவளியன்று பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். பெரியோரின் முழு ஆசீர்வாதம் இருந்தால் தான் நம் வாழ்வின் முன்னேற்றம் சிறப்பாக் அமையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தேவையற்ற சண்டை சச்சரவுகள் வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது. எல்லோரும் மகிழ்ச்சியுடன், இன்முகத்துடன் இருப்பதால் லட்சுமி கடாட்சத்தை பெற முடியும்.
தீபாவளி 2023 எப்போது? தீபாவளியின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன? முழு விவரம் இதோ
பொதுவாக எந்த சுப தினத்திலும் இரும்பு பொருட்களை வாங்கமாட்டார்கள். எனவே தீபாவளியன்று இரும்பு உள்ள பொருட்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இரும்பு பாத்திரங்களை தவிர்க்க வேண்டும். மேலும் தீபாவளி அன்று ஸ்டீல் பாத்திரங்களை வாங்குவது மங்களகரமானது இல்லை என்று கருதப்படுகிறது. அதற்கு பதில் வெண்கலம், செம்பு பாத்திரங்களை வாங்கலாம்.
அதே போல் தீபாவளி அன்று கண்ணாடிப் பொருட்களை வாங்கக்கூடாது. கண்ணாடி என்பது லேசாக கை தவறினாலே அபசகுணமாக கருதப்படுவதால், நல்ல நாளில் கண்ணாடி உடைவது நல்லதல்ல. கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களையும் தீபாவளி அன்று வாங்கக் கூடாது.