Oct 09 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்னைக்கு பிரச்சனைகள் சுத்தி சுத்தி அடிக்குமாம்.! கவனமா இருங்க.!

Published : Oct 08, 2025, 04:09 PM IST
dhanusu rasi

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 09, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

  • தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம். 
  • எனவே கவனத்துடன் இருக்க வேண்டும். வேலைகளில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம் அல்லது உங்கள் பணிகளில் தாமதம் ஏற்படலாம். 
  • முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காமல் பொறுமையை கையாள வேண்டும். 
  • மற்றவர்கள் பேச்சை கேட்பதை நிறுத்திவிட்டு, உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டால் தெளிவான முன்னேற்றத்தை காணலாம். 
  • பணியிடத்தில் மூத்த அதிகாரிகளுடன் சிறு சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.

நிதி நிலைமை:

  • நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பதில் தெளிவின்மை இருக்கலாம். 
  • எனவே அவசரமாக எந்த நிதி முடிவையும் எடுக்காதீர்கள். 
  • பண விஷயங்களில் பொறுமை தேவை. அவசர முடிவுகளை தவிர்த்து விடுங்கள். 
  • பட்ஜெட்டில் உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து கொள்வது நல்லது. 
  • நிதானமான மற்றும் நிலையான அணுகுமுறை நிதி ஸ்திரத்தன்மைக்கு உதவும். 
  • முதலீடுகள் குறித்து இன்று கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • குடும்ப உறவுகளில் இன்று சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். 
  • ஆனால் பொறுமையாக கையாள்வதன் மூலம் அவற்றை சரி செய்யலாம். 
  • எல்லாவற்றையும் இன்றே சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 
  • எனவே பொறுமை காப்பது நல்லது. உங்கள் துணையுடன் உண்மையாகவும், அன்பாகவும் இருங்கள். 
  • தனியாக இருப்பதை தவிர்த்து விட்டு மனதிற்கு பிடித்தவர்கள், அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுவது நல்லது.

பரிகாரங்கள்:

  • உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவானை வணங்கலாம். 
  • விஷ்ணு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நன்மையைத் தரும். 
  • மன அமைதிக்கு தான தர்ம காரியங்களில் ஈடுபடலாம். 
  • ஏழை எளியவர்கள், இயலாதவர்களுக்கு உதவி செய்நாள் அன்னதானம் வழங்குவது பலன்களைக் கூட்டும்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!