Oct 09 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்றைய தினம் நிதானமாக செயல்பட்டால் வெற்றி உங்களுக்கு தான்.!

Published : Oct 08, 2025, 04:02 PM IST
kumba rasi

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 09, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் நீங்கள் நிதானத்துடன் செயல்படுவது உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். 
  • அவசர முடிவுகளை தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுங்கள். அதுவே உங்களுக்கு புதிய பலத்தை தரும். 
  • இன்று மனத் தெளிவு கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி சரியான முடிவை எடுப்பீர்கள். 
  • தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். இது நன்மைகள் பயக்கும். 
  • உறவுகளையும் தொழில் சார்ந்த விஷயங்களையும் சமாதானத்துடன் கையாள வேண்டியது அவசியம்.

நிதி நிலைமை:

  • நிதி சார்ந்த விஷயங்களில் கவனமும், திட்டமிடலும் தேவை. எ
  • ந்த ஒரு பெரிய முதலீட்டையும் ஒத்தி வைப்பது நல்லது. 
  • உங்கள் பழைய கடன்களை அடைக்க அல்லது சேமிப்பு பழக்கத்தை உருவாக்க இது நல்ல நாளாகும். 
  • சிறிய அளவிலான சேமிப்பு பழக்கம் பின்னர் பெரிய அளவில் கை கொடுக்கும். 
  • எனவே இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். 
  • வெளிநாட்டுத் திட்டங்கள் அல்லது வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நிதி உதவி அல்லது புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது

தனிப்பட்ட வாழ்க்கை:

  • இன்று உங்கள் உணர்வுகளை தெளிவாகவும், மென்மையாகவும் வெளிப்படுத்துவீர்கள். 
  • இதன் மூலம் உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும். 
  • துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 
  • திருமண பந்தம் மூலமாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். 
  • குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் இன்றைய தினம் பரிபூரணமாக கிடைக்கும். 
  • தனிப்பட்ட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

  • காரியத் தடைகள் நீங்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபடலாம். 
  • அனுமன் கோயிலில் தீபமேற்றி வழிபடுவது முன்னேற்றத்தைக் கொடுக்கும். 
  • பெருமாள் மற்றும் தாயாரை வழிபடுவது நன்மைகளைத் தரும். 
  • ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது, கஷ்டப்படும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தருவது பலன்களை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!