அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 18ஆம் தேதி பங்குனி திருவிழா தொடங்கி 28ஆம் தேதி கொடி இறக்கத்துடன் பத்து நாட்கள் திருவிழா நிறைவடைந்த்தையடுத்து தொடர்ந்து பாதையாத்திரை பக்தர்கள் தீர்த்த காவடிகள் எடுத்து குவிந்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவில் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து உள்ளதால் சுமார் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 18ஆம் தேதி பங்குனி திருவிழா தொடங்கி 28ஆம் தேதி கொடி இறக்கத்துடன் பத்து நாட்கள் திருவிழா நிறைவடைந்த்தையடுத்து தொடர்ந்து பாதையாத்திரை பக்தர்கள் தீர்த்த காவடிகள் எடுத்து குவிந்து வருகின்றனர்.
undefined
இதையும் படிங்க: Gold Vastu Tips : வீட்டில் 'இந்த' இடத்தில் தங்கம் வைத்தால் செல்வம் பெருகுமாம்... ஒருமுறை வச்சிதான் பாருங்களே!
தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பக்தர்கள் பழனி அடிவாரம் கிரிவலப்பாதையில் தீர்தகாவடிகள் எடுத்து ஆடி பாடியும , மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையம் மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லிங்கத்தில் இருந்து வெளிப்படும் நண்டு.. தமிழ்நாட்டில் இருக்கும் இந்த அதிசய கோயில் பற்றி தெரியுமா?
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவிலில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு வசிதிக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.