சூரனை வதம் செய்த முருகப்பெருமான்… திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள் அரோகரா என பக்தி முழக்கம்!!

By Narendran S  |  First Published Oct 30, 2022, 11:53 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான முருகபெருமான் வேல் வாங்கும் விழா நேற்று நடைபெற்றதை தொடர்ந்து இன்று சூரசம்ஹாரம் கோயில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு விமர்சையாக நடைபெற்றது.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்… கடற்கரையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!!

Tap to resize

Latest Videos

undefined

முன்னதாக முருகன்பெருமான் தாயாரிடம் பெற்ற சக்திவேலுடன் தங்கமயில் வாகனத்திலும், போர்ப்படை தளபதியான வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளினார். இதில் அசுரனான பத்மாசூரன் சிங்கமுகமாகவும், ஆட்டுத் தலையாகவும், மனிதத் தலையாகவும் மாறி மாறி உருவெடுத்து வர பத்மாசூரனை சக்திவேல் கொண்டு முருபெருமான சம்ஹாரம் செய்த நிகழ்வை அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: சிறுவாபுரியில் சிறப்பாக நடந்த சூரசம்ஹார விழா!!

அதை தொடர்ந்து உற்சவர் சன்னதிக்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானைக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர். இதன் காரணமாக திருப்பரங்குன்றம் முழுவதும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

click me!