பங்காரு அடிகளார் திடீர் மறைவு செய்தியை அறிந்த பக்தர்கள் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மேல்மருவத்தூர் பகுதிக்கு தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடத்தை உருவாக்கியவர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இவரை அம்மா என்று அழைப்பார்கள். இந்நிலையில், கடந்த ஓராண்டாக பங்காரு அடிகளார் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி இன்று மாலை 5 மணிக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், பங்காரு அடிகளார் திடீர் மறைவு செய்தியை அறிந்த பக்தர்கள் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மேல்மருவத்தூர் பகுதிக்கு தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆண்கள், பெண்கள், சிறார்கள் உள்ளிட்டோர் சிவப்பு நிற ஆடை அணிந்து கண்ணீர் மல்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க;- பங்காரு அடிகளார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு!
இந்நிலையில், அஞ்சலி செலுத்தும் வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் இட்லி, தோசை, பொங்கல் என பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.மேலும், பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு சித்தர் பீடம் சார்பில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.