திருவண்ணாமலையில் ஊர்வலத்திற்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முருகனை தேடி சேவலும் மயிலும் வந்து வணங்கிய சம்பவம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழாவான நேற்றிரவு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு தீப தூப ஆராதனை மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை, பராசக்தி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்சர உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் சிம்ம வாகனத்திலும் வலம் வந்தனர். பராசக்தி அம்மன் அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் வந்தனர். பஞ்ச மூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக 4 மாட வீதியில் வந்து வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அப்போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முருகனை தேடி சேவலும் மயிலும் வந்து வணங்கிய சம்பவம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. வெள்ளி மயில் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் முருகன் காலடியில் உயிரோடு இருந்த சேவல் ஒருபுறமும், மயில் மற்றொருபுறமும் அமர்ந்து நீண்ட நேரம் வழிபட்டன. இதை பார்த்த பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர்.
தொடர்ந்து 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்தால், இந்த பலன்கள் கிடைக்குமாம்..! என்ன தெரியுமா?
மேலும் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர். மேலும் முருகர் சிலைக்கு கீழ் இருந்த மயிலையும் சேவலையும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிறகு, ஆணவம் அழிந்த சூரன் தன் தவறை உணர்ந்து தன்னை மன்னிக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டினான். அவன் மேல் இரக்கம் கொண்ட முருகன், பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும், சேவலை கொடியிலும் தன்னுடன் இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.