12 ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால், முக்தி மற்றும் முருகப் பெருமானின் தரிசனம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
பொதுவாகவே, கார்த்திகை அன்று முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டால், அனைத்து வகையான பலன்களும் கிடைக்கும். ஆனால், பக்தர்கள் சிலருக்கு விரதம் எப்படி எடுக்க வேண்டும் என்ற விவரம் அவர்களுக்கு தெரியாது. அந்தவகையில், இத்தொகுப்பில் நாம் கார்த்திகை விரதம் எப்படி இருக்க வேண்டும் மற்றும் அவற்றின் நன்மைகள் போன்ற விவரங்களை குறித்து இங்கு பார்க்கலாம்...
கார்த்திகை விரதம் எப்படி இருக்க வேண்டும்?
தமிழ் கடவுள் என்று போற்றப்படுபவர் முருகன். இவர் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால், அவருக்கு "கார்த்திகேயன்" என்ற பெயர் உண்டு. இந்த சிறப்பான நாளில் அவருடைய அருளைப் பெறுவதற்கு இருக்கும் விரதம் தான் "கார்த்திகை விரதம்" ஆகும்.
இதையும் படிங்க: இருளை நீக்கி ஒளி தரும் மாதம் "கார்த்திகை" மாதம் .. வளமான வாழ்க்கையும் தரும்!
இந்நாளில், அதிகாலையில் எழுந்து நீராடி, முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். அதன் பின்னர், கார்த்திகை விரதம் இருப்பவர்கள், அந்நாள் முழுவதும் முருகனின் பல்வேறு வகையானப் பெருமைகளைப் பாடி முருகனை வழிபட வேண்டும். மேலும் இந்நாளில், விரதத்தை கடைபிடிப்பவர்கள் இரவு மற்றும் பகல் முழுவதும் தூங்காமல், வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின் அடுத்த நாள் கால காலையில் நீராடி முருகனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: கார்த்திகை மாதத்தில் மஞ்சளை கொண்டு "இந்த" பரிகாரங்களை செய்யுங்கள்..விருப்பங்கள் நிறைவேறும்!
விரதத்தின் பலன்கள்:
இந்நாளில், ஏழை எளியோருக்கு உணவு வழங்கினால் புண்ணியம் கிடைக்கும்.
அதுபோல் முருகனின் மந்திரங்களை சொல்லி, விரதத்தை கடைபிடித்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர் மற்றும் எந்த விதமான நோயும் அண்டாமல் நீண்ட நாள் வாழ்வதற்கான அருளைப் பெறுவீர்கள்.
குறிப்பாக 12 ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்து வந்தால், முக்தி மற்றும் முருகப் பெருமானின் தரிசனம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
மேலும், இந்த கார்த்திகை விரதம் கடைப்பிடிப்பவர்களிக்கு அனைத்துப் பிரச்சனைகளும் விலகி ஓடும் மற்றும் வாழ்வின் பதினாறு செல்வங்களும் கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D