நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயமாகாமல் இருக்கவும், பணம் பல மடங்கு பெருகவும் ஆன்மீகத்தில் சிறந்த பரிகாரம் உள்ளது.
எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. என்ன தான் பட்ஜெட் போட்டு, குடும்பம் நடத்தினாலும் திடீரென ஏற்படும் மருத்துவ செலவு போன்ற திடீர் செலவுகளால் பணம் விரயமாகிவிடும். இதனால் வழக்கமான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் பல குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலை எப்போது மாறும் என்பதே அனைவரின் ஏக்கமாக உள்ளது.
அந்த வகையில் நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயமாகாமல் இருக்கவும், பணம் பல மடங்கு பெருகவும் ஆன்மீகத்தில் சிறந்த பரிகாரம் உள்ளது. இதுகுறித்து பார்க்கலாம். முன்பெல்லாம் சம்பளம் வாங்கிய உடன் அல்லது தொழிலில் லாபம் கிடைத்த உடன் அந்த படத்தை சாமி படத்திற்கு முன்பு வைத்து விளக்கேற்றி வணங்கிய பின்பு, எந்த செலவையும் செய்ய வேண்டும் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். இதையே பணத்தை சேமிப்பதற்கான முதல் முயற்சி என்றே சொல்லலாம்.
இந்த ஆடி மாதம் ஒரே நாளில் பிரசித்து பெற்ற அம்மன் கோயில்களுக்கு செல்லலாம்.. எப்படி தெரியுமா?
பணம் என்பது மகாலட்சுமி தாயாரை குறிக்கிறது. எனவே நம்மிடம் பணம் இருந்தால், மகாலட்சுமி தாயார் நம் கையில் இருக்கிறார் என்று அர்த்தம். எனவே பணத்தை வீட்டிற்கு கொண்டு வராமல், வழியிலேயே செலவு செய்தால் எப்படி வீட்டில் சுபிக்ஷம் இருக்கும். இதன் காரணமாகவே நம் முன்னோர்கள், வீட்டின் பூஜை அறையில் பணத்தை வைத்து விட்டு, பின்னர் செலவு செய்ய சொன்னார்கள். ஆனால் காலம் மாற மாற நாம் இந்த முறையை பின்பற்றுவதில்லை. பெரும்பாலானவர்களு இன்று வங்கிக்கணக்கில் தான் சம்பளம் கிரெடிட் ஆகிறது. அப்படி கிரெடிட் ஆன உடனேயே பல செலவுகளுக்கும் ஆன்லைனிலேயே பணத்தை பரிவர்த்தனை செய்கிறோம்.
ஆனால் இனிமேல், நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய பங்கையாவது எடுத்து பூஜையறையில் வைத்து விளக்கேற்றிய பிறகு செலவு செய்வது தான் சிறந்தது. இப்படி பூஜை அறையில் பணத்தை வைத்து வணங்கும் போது, ஒரு வெற்றிலை வைத்து, அதில் சிறிதளவு பச்சை கற்பூரம் மற்றும் ஒரு கைப்பிடி துவரம் பருப்பை வைக்க வேண்டும். பின்னர் அதன் மேல் உங்கள் சம்பள பணத்தை வைத்து விளக்கேற்றி வணங்க வேண்டும். அதன்பின்னர் அந்த பணத்தை செலவழித்தால் அதில் ஒரு ரூபாய் கூட வீண் விரயம் ஆகாது.
துவரைக்கு வீண் விரயங்களை தடுக்கும் சக்தி உள்ளது. மேலும் பணத்தை பெருக்கக்கூடிய சக்தியும் உள்ளது. அன்னபூரணி தாயார் வைத்து வணங்குவோர், அதில் போட்டு வைக்கும் அரசிக்கு பதில் துவரம் பருப்பு போட்டு வைத்தாலும் குடும்பம் சுபிக்ஷமாக இருக்கும்.
குபேரனுக்கு பிடித்த இந்த செடியை வீட்டில் வைத்தால் போதும்.. வீட்டில் செல்வ செழிப்பு பெருகும்..