அதிகாலை 3.30 மணியில் இருந்து 6 மணி வரையில் இருக்கும் பொன்னான நேரம் தான் பிரம்ம முகூர்த்த நேரம். அப்போதுதான் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
அதிகாலையில் எழுவது இங்கு பலருக்கும் குதிரை கொம்பாக தான் இருக்கும். ஏன் சீக்கிரம் எழ வேண்டும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என சோம்பலாக படுத்து கிடப்போம். ஆனால் இந்து சாஸ்திரம் மட்டுமில்லாமல் ,கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களும் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக இருப்பதை வலியுறுத்துகின்றன. அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குடும்பதலைவனும், தலைவியும் எழுந்து பூஜை செய்தால் குடும்பம் தளைக்கும். குழந்தைகள் இந்த நேரத்தில் எழுந்து படித்தால் கல்வியில் வெற்றிதான்.
அப்போ ஏன் விழிக்கணும்?
அதிகாலையில் அந்த பிரம்ம முகூர்த்த நேரம் தான் தேவர்களும் பித்ருக்களும் நம் வீடு தேடி வரும் உன்னத நேரம். அப்போது நாம் உறங்கினால் அவர்கள் எப்படி நம்மிடையே குடி கொள்வார்கள். விருந்தினர் வரும்போது கதவை அடைத்து கொண்டாலோ, உறங்கி கொண்டிருந்தாலோ திரும்பிதானே போவார்கள். அப்படிதான் தேவர்களும் நம்மை காணாமல் செல்வார்கள்.
என்னென்ன பயன்கள்?
திருமண தடை, கடன் சுமை, விருப்பமான வேலை, காதல் கை கூட, கல்வி மேம்பட உள்ளிட்ட எந்த கோரிக்கையாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பின்வரும் கோமாதா பூஜையை செய்தால் பலன் கிடைக்கும். நினைத்த காரியம் கைகூடும்.
என்ன பூஜை?
நமக்கு பசு மாட்டின் கன்றுதான் இந்த பூஜையை செய்ய உதவும். இந்த பூஜைக்கு கோமாதா பூஜை என்றொரு பெயரும் உண்டு. இந்த பூஜையை அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்திலே செய்து முடிப்பது முக்கிய விதி.
21 நாள் மந்திரம்!
அறிவியல் முறைப்படி எந்த காரியம் ஆனாலும் அதை நாம் பழகவோ, இல்லை பலன் பெறவோ 21 நாள்கள் ஆகுமாம். இந்த பூஜை கூட 21 நாள் செய்ய வேண்டியதுதான். எந்த சோம்பலும் கொள்ளாமல் 21 நாள் செய்து விட்டால் போதும் நம் வாழ்வில் வளம் பெறலாம். பூஜையை தொடங்கும் முன்பு கவனிக்க வேண்டியது, நீங்கள் தொடங்கும் நாள் அன்று வெள்ளி கிழமையாக இருக்க வேண்டும். வீட்டில் கோமாதாவின் சிலையோ, படமோ கட்டாயம் இருக்க வேண்டும். வெள்ளி அன்று எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சாமி படங்களை கண்டு வணங்கி கோமாதா சிலையை பூக்களால் அலங்கரியுங்கள். நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஒளிர விடுங்கள். வசதி வாய்த்தவர்கள் எண்ணெய் இல்லாமல் நெய்யில் கூட விளக்கை ஒளிரவிடலாம். அப்போது குலதெய்வத்தை மனதில் நினைத்து கொள்ளுங்கள். தீபம் ஒளிரும்போது மனதில் உள்ள வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லுங்கள். கீழ்கண்ட மந்திரத்தை ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ உச்சரித்தால் நல்லது. மந்திரத்தை சொல்ல மறக்கவேண்டாம்.
இதையும் படிங்க; கழுத்தை நெருக்கும் கடனால் திணறுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்... உடனடி தீர்வு!
"ஓம் சுப காயை வித்மஹே காமதாத்ரியை ச தீமஹி தந்தோ தேனு ப்ரசோதயாத்" என்பது தான் அந்த மந்திரம். நீங்கள் என்ன தான் நினைத்து வேண்டினாலும் இந்த மந்திரம் அதை வாய்க்கப்பண்ணும்.
இதை கண்டிப்பா செய்யுங்க!
நைவேத்தியம் செய்வது முக்கியம். நாம் வணங்கும் கோமாதாவுக்கு 2 வாழைப்பழம் கொண்டு நைவேத்தியம் செய்ய வேண்டும். அது முடியாவிட்டால் வெல்லம் கலந்த பச்சரிசி மாவு உருண்டை வைக்கலாம். பூஜைகள் நிறவடைந்ததும் நைவேத்தியமாக வைத்தவற்றை பசு மாட்டிற்கு கொடுங்கள்.
நினைத்த காரியம் நடக்க வேண்டும் என 21 நாள்களும் நினைத்து முழு முயற்சி எடுத்து இந்த பூஜை செய்து வந்தால் நிச்சயம் அது நடக்கும். உங்களுடைய ஈடுபாட்டை பூஜையில் மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட காரியம் நடப்பதிலும் கவனமாக கொண்டிருங்கள். அப்போதுதான் நடக்கும். பிரபஞ்ச ஆற்றல் உங்களுடைய முயற்சிக்கு மெய்வருத்த கூலி தரும்.
இதையும் படிங்க; வீட்டில் என்றும் குறையாத செல்வம் பெருகனுமா? பெண்கள் இந்த குளியலை பின்பற்றினாலே போதுமாம்!