பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்கூடிய கடவுளாக விளங்க கூடியவர் திருவண்ணாமலை அண்ணாமலையார். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறையின் முன்பு பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்கூடிய கடவுளாக விளங்க கூடியவர் திருவண்ணாமலை அண்ணாமலையார். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை தீப விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் மாட வீதிகளில் காலையில், மாலையிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
undefined
இதையும் படிங்க;- தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா.. அடேங்கப்பா.. பக்தர்களுக்கு இவ்வளவு சிறப்பு ஏற்பாடுகளா? காவல்துறை விளக்கம்.!
கடந்த வியாழக்கிழமை பஞ்சரத தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், விழாவின் இறுதி நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு அண்ணாமலையார் கருவறைக்கு முன்பாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் விண்ணைப் பிளந்த படியே பரணி தீபத்தை வழிபட்டனர்.
இதனையடுத்து தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இதையும் படிங்க;- கார்த்திகை தீபம் 2023 : தவறுதலாக கூட இந்த முறையில் தீபம் ஏற்றாதீர்கள்.. மோசமான இழப்பு நேரிடலாம்!