ஆவணி அமாவாசை 2024 : உங்க ராசிப்படி தானம் செய்ங்க.. அதிர்ஷ்டம் உங்க வீடு தேடி வரும்!

By Kalai Selvi  |  First Published Aug 31, 2024, 9:24 AM IST

Avani Amavasai 2024 : ஆவணி அமாவாசை நாளில் உங்கள் ராசி அடிப்படையில் தானம் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா?


இந்து மதத்தில் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான மிகவும் முக்கியமான நாள். மேலும், ஆவணி மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்நாளில் தர்ப்பணம் தானங்கள் செய்தால் அவை முன்னோர்களுக்கு நேரடியாக செல்லும் என்பது ஐதீகம்.

அதுமட்டுமின்றி, பித்ருக்களின் சாபம், தோஷம் ஆகியவை நீங்கவும் வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான கஷ்டங்கள், பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு அமாவாசை மிகவும் ஏற்ற நாளாகும். அந்த வகையில், இந்த 2024 ஆண்டு ஆவணி மாதம் அமாவாசை செப்டம்பர் தொடக்கத்தில் வருகிறது. அதாவது, செப்டம்பர் 2ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வருகிறது. இந்த அமாவாசை திங்கள்கிழமை அன்று வருவதால், இது 'சோமவதி அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த சோமவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் தர்மம் செய்தால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். அதுபோல கடந்த கால பாவங்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்த சோமாவதி அமாவாசை நாளில் செய்யப்படும் தானம் முன்னோர்களை மகிழ்ச்சி அடையச் செய்வதாகவும், அவர்களது ஆசிகளை பெறுவதாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில், உங்கள் ராசியின் அடிப்படையில் நீங்கள் சோமாவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் செய்வது இன்னும் பல நன்மைகளை உங்களுக்குத் தரும் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

இதையும் படிங்க:  ஆவணி மாதம் 2024 : முக்கிய விரதங்கள், பண்டிகை நாட்கள் குறித்த முழுவிவரம் இதோ!

அமாவாசை நாளில் ராசி அடிப்படையில் செய்ய வேண்டிய தானம் :

1. மேஷம் - வெல்லம், கோதுமை மற்றும் பிற உணவுகள்
2. ரிஷபம் - நெய் மற்றும் வெள்ளிப் பொருட்கள்
3. மிதுனம் - வெண்கலம் மற்றும் பச்சை பயிறு
4. கடகம் - வெள்ளை ஆடை மற்றும் பால்
5. சிம்மம் - தங்க நகைகள், ஆடைகள் மற்றும் உணவு
6. கன்னி - நெய், எண்ணெய் மற்றும் தானியங்கள்
7. துலாம் - பால், நெய் மற்றும் தங்கப்பொருட்கள்
8. விருச்சகம் - நெய் மற்றும் சிவப்பு ஆடைகள்
9. தனுசு - உணவு, தங்கம் மற்றும் வெளியில் செய்யப்பட்ட பொருட்கள்

10. மகரம் - தேங்காய்
11. கும்பம் - நெய்
12. மீனம் - நெய், தங்க பொருட்கள்

இதையும் படிங்க:  இறந்தவர்களின் அஸ்தி ஏன் புனித நதியில் கரைக்கப்படுகிறது தெரியுமா?

2024 ஆவணி அம்மாவாசை நாளில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் : 

  • ஆவணி அமாவாசை திதியானது செப்டம்பர் 2ம் தேதி காலை 6:33 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை அதாவது செப்டம்பர் 3ம் தேதி காலை 7:59 மணி வரை இருக்கும்.
  • செப்டம்பர் 22ஆம் தேதி காலை 7:30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம், அதுபோல காலை 10:30 மணி முதல் பகல் 12 மணி வரை எமகண்டம் என்பதால் சரியான நேரத்தில் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களின் ஆசியைப் பெறுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!