Astrology tips: காதில் தங்கம் அணிவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

By Kalai Selvi  |  First Published Apr 28, 2023, 6:57 PM IST

தங்கம் என்பது அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக காதில் தங்கம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்...


இந்திய கலாச்சாரத்தில் நகைகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்து மதத்தில் தங்கத்திற்கு முக்கிய இடம் உண்டு. நகைகளை அணிவது பாரம்பரியமாக கருதப்படுகிறது. காது, மூக்கு, கழுத்து என நகைகளை அணிவதன் மூலம் அது  அழகை தருவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் தருகிறது என்று நம்  முன்னோர்கள் உணர்ந்து ஆபரணங்களை அணியத் தொடங்கியுள்ளனர்.

தங்கம் அணிவது மத மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் தங்கத்திற்கு ஆன்மீக ஆற்றல் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு காதில் தங்கம் அணியப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் காதில் தங்கம் அணியும்போது இரட்டிப்பான அழகைக் கொடுக்கிறது. எனவே காதில் தங்கம் அணிவதால் கிடைக்கும் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றது.

Tap to resize

Latest Videos

காதில் தங்கம் அணிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

ஜோதிடத்தின் படி, நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் கிரகங்கள் சூழ்ந்து இருக்கிறது. கிரகங்கள் வலுவிழந்தால் நம் வாழ்வில் பிரச்சனை ஏற்படும். அதில் நம் காதானது புதன் கிரகத்துடன் தொடர்புடையது. எனவே நம் காதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், நம் ஜாதகத்தில் புதன் வலுவிழந்து இருப்பதாக குறிக்கிறது. அதுபோல் ராகு, கேது மோசமான நிலையில் இருந்தால், அது நம் காதின் ஆரோக்கியத்தை கெடுக்கும் மற்றும் நோய் நம்மை ஆட்கொள்ளும். 

இதையும் படிங்க: ஒருபோதும் அன்னதானத்தில் இந்த நபர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா?

புதன் பலம் :

தங்கம் அணிவதால் ஜாதகத்தில் புதனின் நிலை மேம்படும். ராகுவின் தோஷமும் நீங்கும். 

வியாழனின் ஆசிகள் : 

தங்கம் வியாழனை வலுப்படுத்த வேலை செய்கிறது. காதில் தங்க ஆபரணங்களை அணிந்தால் குருவின் அருள் கிடைக்கும். புதன் மற்றும் வியாழன் சேர்க்கை நல்ல பலன்களைத் தரும்.

காது ஆரோக்கியம் பெறும்: 

காதில் தங்க நகைகளை அணிந்தால் காது சம்பந்தமான நோய் எதுவும் வராது. காது நோய் குறைவதோடு கேட்கும் திறன் மேம்படும். 

மூளையை கூர்மையாக்கும்: 

காதில் தங்கத்தை அணிவதால் புத்தி கூர்மையாகிறது. காது குத்துவது மூளையின் ஆற்றலைத் தீவிரப்படுத்துகிறது. தங்கம் அணிவதால் வலிமை கூடும். காதில் தங்கத்தை அணிவதன் மூலம் மன அழுத்த பிரச்சனை நீங்கும். மேலும் மூளையின் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமானால் தங்கத்தை அணிவது நல்லது.

காதில் தங்கம் அணிவதால் ஏற்படும் அறிவியல் பலன்கள்: 

காதில் தங்கம் அணிவதால் பக்கவாதம், குடலிறக்கம் போன்ற கடுமையான நோய்கள் வருவதை  தடுக்க முடியும்.

click me!