வினை தீர்க்க, வெற்றி பெற ,புண்ணியம் சேர, தன ஆகர்ஷணம் கிடைக்க வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு!

By Asianet Tamil  |  First Published Apr 28, 2023, 4:54 PM IST

வெள்ளெருக்கினால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்தால் பல்வேறு பலன்கள் கிடைக்கும். அத்தகைய பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்
 


எத்தனையோ செடிகள் இருப்பினும் வெள்ளெருக்குச் செடிக்கு என்று ஒரு தனித்துவமான சக்தி உள்ளது. வெள்ளெருக்கை தேவ மூலிகை / விருட்சம் என்று அழைப்பார்கள். அரிதான பொருள் உள்ள இடங்களில் தான் வெள்ளெருக்கு செடி வளரும் என்று சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த வெளேருக்கு செடியில் வளரும் பூவினை விநாயகருக்கு சாற்றி வழிபடுவதை நாம் பார்த்து இருப்போம்.

அதே போன்று வெள்ளெருக்கினால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்தால் பல்வேறு பலன்கள் கிடைக்கும். அத்தகைய பலன்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம். விநாயக பெருமானை இந்தியாவிலும், நேபாளத்திலும் வழிபாடு செய்கின்றனர். இவருக்கு கணபதி, ஆனைமுகன், கணேஷ், பிள்ளையார் என்று பல்வேறு பெயர்களில் போற்றப்படுகிறார்.

பொதுவாக 9 விதமான எருக்கு செடிகள் இருக்கின்றன. தண்ணீர் இல்லாமல் எந்த தாவரமும் உயிர் வாழாது என்று நாம் அறிந்த ஒன்று.ஆனால் வெள்ளருக்கு தாவரம் இதில் இருந்து முரண் படுகிறது. அதாவது வெள்ளெருக்கானது 12 வருடங்கள் வரை கூட தண்ணீர் இல்லாமல் உயிர் வாழும் தன்மை பெற்றது.

வெள்ளெருக்கு எப்படி வறட்சியிலும் செழிப்பாக வளர்கிறதோ அது போன்றே வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட விநாயகரை வணங்குபவர்களுக்கு செழிப்பான வாழ்வு கிடைக்கும் அற்புதமான இறையாற்றலை தன்னுள்ளே பெற்றுள்ளது. 6 வருடங்கள் வளர்ந்த செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேரினால் செய்யப்படும் வெள்ளெருக்கு விநாயகருக்கு தெய்வீக சக்தி நிறைந்து காணப்படும் .

வேண்டிய வரம் தரும் வெள்ளெருக்கு விநாயகர் சிலை :

தன்னுள்ளே மருத்துவ குணம் கொண்ட வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து தீபம் ஏற்றி, தூபங்கள் காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் நேர்மறையான தெய்வ ஆற்றல் வெளிப்பட்டு வீட்டில் இருக்கும் தீய சக்தி அனைத்தும்

அதிர்ஷ்டமுள்ள இடத்தில் மட்டும் தான் இந்த வெள்ளெருக்கு செடி வளரும் என்று கூறப்படுவது போல் வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவார் என்றும் கூறப்படுகிறது.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் வீடு முழுவதும் சுபிட்சம் நிறைந்து காணப்படும் . விநாயகருக்கு உகந்த நாட்களான செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வெளேருக்கு விநாயகருக்கு மஞ்சள் பூசி , பூஜை செய்து வந்தால் செல்வம் பெருகி தன ஆகர்ஷணம் உண்டாகும்..!

நினைத்த காரியங்கள் நிறைவேறவும், துன்பம் நீங்கி இன்பம் பெருக வெள்ளெருக்கு விநாயகரை தொடர்ந்து வணங்கலாம் .
அதோடு வெள்ளெருக்கு விநாயகரை வணங்கி வருவதன் மூலம் நவகிரக தோஷத்தின் தாக்கம் குறைவதுடன் எடுக்கும் செயல்களில் அனைத்திலும் வெற்றி கிட்டும்!

குட்டிஸ்கள் எதனால் விரல் சூப்புகிறார்கள் ? அதன் பின்னணி தெரியுமா? வாங்க பார்க்கலாம்!

Tap to resize

Latest Videos

click me!