Chitra Pournami 2023: சித்ரா பௌர்ணமி அன்று யாரை வழிபட வேண்டும்? எவ்வாறு பூஜை, விரதம் இருக்க வேண்டும் என்ற முழுதகவல்கள்..
மற்ற நாள்களை விட பௌர்ணமி விரதம் ரொம்ப சிறப்பு வாய்ந்தது. அதிலும் சித்ரா பெளர்ணமியில் எல்லா தெய்வங்களையும் வழிபடலாம். அன்றைய தினம் வழிபாடு செய்பவர்களுக்கு உடனடி பலன் கிடைக்கும். இது மனத் தெளிவு, ஞானம் (wisdom) ஆகியவை பெறும் நாள் என்ற காரணத்தால் சித்ர குப்தன், சந்திர பகவான் ஆகியோரை வழிபட ஆன்மீக பெரியோர் அறிவுறுத்துகின்றனர்.
கார்த்திகை பெளர்ணமி முடிந்த பிறகு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும் பெளர்ணமியை தான் சித்ரா பெளர்ணமி என்கிறார்கள். இந்த நாளில் தான் மதுரை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவண்ணாமலையில் கிரிவலம் கூட சித்ரா பௌர்ணமியில் செல்லலாம். மதுரை, திருவண்ணாமலை என பயணம் செய்து வழிபட முடியாதவர்கள் அன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். வீட்டிற்கு அருகே உள்ள பெருமாள் கோயில் அல்லது ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
undefined
சித்ரா பௌர்ணமி வழிபாடு
சித்ரா பௌர்ணமியில் சித்ர குப்தரின் படம் வீட்டில் இருந்தால் பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அது இல்லாதபட்சத்தில் கையில் ஏடும், எழுத்தாணியும் இருக்கும் அவருடைய உருவத்தை அரிசி மாவு கொண்டு வரைந்து வைத்து வழிபடுங்கள். வழிபாட்டின்போது "எங்களிடைய பாவ கணக்கு குறையவும், புண்ணிய கணக்கு கூடவும் பாவத்தை நோக்கி போகாமல் இருக்க புத்தியை மாற்றவும் ஞானத்தை கொடு"என பிரார்த்தனை செய்யுங்கள்.
சித்ரா பெளர்ணமி விரதம்
சித்திர குப்தரை வேண்டிக் கொண்டு சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருக்கலாம். விரதத்தன்று பால், தயிர், உப்பு போன்றவை தவிர்க்க வேண்டும். சித்ர குப்தற்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சோறு தேங்காய் சோறு ஆகிய கலவை சாதனங்களை நைவைத்தியமாக படைக்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் வைத்துள்ள சித்ரகுப்தரின் படத்திற்கு நெய்வேத்தியங்களை படைத்து, தீப தூப ஆராதனை காட்டிய பின்னர் சந்திர பகவானையும் வழிபட வேண்டும்.
இதையும் படிங்க: வெட்டி வேரை நம் வீட்டில் வைத்தால்... எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும்..வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்!
சித்ரா பௌர்ணமி சிறப்புகள்
வீட்டில் இரவு 7 மணிக்கு பிறகு விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டு மாடி, வீட்டு நுழைவாயில் என சந்திர தரிசனம் முழுமையாக கிடைக்கும் இடத்தில் ஐந்து, ஒன்பது பதினொன்று ஆகிய கணக்கில் விளக்கு ஏற்றுங்கள். இந்த தீபங்களில் ஏதேனும் ஒன்று நெய் தீபமாக இருக்குமாறு உறுதி செய்து கொள்ளுங்கள். இப்படி தீபம் ஏற்றி நைவேத்தியங்களை சந்திரனுக்கும், சித்திரகுப்தருக்கும் படைத்து.. இரவில் சந்திரனை வழிபட்ட பின்னர் அனைவரும் ஒன்றாக நிலாச்சோறு போல சித்திர அன்னங்களை சாப்பிட வேண்டும்.
சித்ரா பெளர்ணமி 2023 தேதி எப்போது?
இந்தாண்டு சித்ரா பௌர்ணமி மே 05ஆம் தேதி ஆகும். வரும் மே 04ஆம் தேதி அன்று இரவு 11.59 மணி தொடங்கி மே 05ஆம் தேதி அன்று இரவு 11.33 வரையிலும் பெளர்ணமி திதி இருக்கிறது. அன்றைய தினம் விரதமிருந்து சித்ர குப்தர், சந்திர பகவான் ஆகியோரை மனதார வழிபடுவதால் கடன் தொந்தரவு ஒழியும். குழம்பி கிடக்கும் மனம் நன்கு தெளிவு பெறும். வீட்டில் செல்வம் தங்கும். பாவங்கள் நீங்கும். குறிப்பாக சித்ரா பௌர்ணமி அன்று 4 பேர் முதல் 5 பேர் வரை உங்களால் இயன்றவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். பிறர் பசி போக்குவதால் புண்ணியம் கிடைக்கும். சித்ரா பெளர்ணமி அன்று சத்ய நாராயணனுக்கு பூஜை செய்து கூட வழிபாடு செய்யலாம்.
இதையும் படிங்க: காலையில் இந்த விஷயங்களை பார்க்காதீங்க ப்ளீஸ்!