சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் இவ்வளவு நன்மைகளா? கடைப்பிடிப்பது எப்படி?

Published : Jul 28, 2023, 03:06 PM IST
 சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் இவ்வளவு நன்மைகளா? கடைப்பிடிப்பது எப்படி?

சுருக்கம்

விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். வாழ்வில் அனைத்து நலன்களையும் தருபவராக விளங்கும் விநாயகருக்கு சிறந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி திருநாள் விளங்குகிறது. 

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத நாட்கள் இருந்தாலும் நமது கஷ்டங்கள் அனைத்தையும் போக்க்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் வாழ்வில் சகல நலன்களையும் தரும் என கூறப்படுகிறது. 

விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். வாழ்வில் அனைத்து நலன்களையும் தருபவராக விளங்கும் விநாயகருக்கு சிறந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி திருநாள் விளங்குகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்குகு விரதம் இருந்து பூஜைகள் செய்வதால் வாழ்வில் எந்த குறையும் இருக்காது என்பது நம்பிக்கை. 

 சங்கடஹர சதுர்த்தி திருநாள் பவுர்ணமிக்கு அடுத்து 4ம் நாள் வரும். சங்கடம் என்றால் இன்னல்கள், ஹர என்றால் அளித்தல். வாழ்வில் வரக்கூடிய இன்னல்களை அழிக்கும் விரதமே இந்த சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்து பூஜைகள் மேற்கொண்டால் வாழ்வில் எந்த குறையும் இருக்காது எனக் கூறப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்தால் வேண்டுதல் மட்டுமல்லாது நமக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

* சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி திருநாளன்று அதிகாலை எழுந்திருக்க வேண்டும்.

*  குளித்து முடித்துவிட்டு விநாயகப் பெருமாளுக்கு விளக்கேற்ற வேண்டும்.

*  மலர்கள் மற்றும் அருகம்புல்லை வைத்து பூஜை செய்யலாம். 

*  சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவருந்தாமல் விரதம் இருப்பது நல்லது. 

*  கோயிலுக்குச் சென்று விநாயக பெருமானின் வழிபாடு செய்து அங்கே மேற்கொள்ளப்படும் பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும். 

*  சந்திரனைத் தரிசித்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பிறகு உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

உடல்நிலை முடியாதவர்கள் விரதத்தின் போது பால், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று இந்த விரதத்தைத் தொடங்கி ஒரு ஆண்டு முழுமையாக இதனை மேற்கொண்டால் நாம் எண்ணிய அனைத்து காரியங்களும் இடையூறு இன்றி நடக்கும் எனக் கூறப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: ஆசிர்வதிக்கும் அஷ்டமி திதி.! அருளை அள்ளித்தரும் அற்புதநாள் எப்படி தெரியுமா?
சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!