Urli : கண் திருஷ்டி நீங்க, செல்வம் பெருக வீட்டில் உருளி வைக்கும் முறை பற்றி தெரியுமா..?

Published : May 06, 2024, 01:24 PM ISTUpdated : May 06, 2024, 01:31 PM IST
Urli : கண் திருஷ்டி நீங்க, செல்வம் பெருக வீட்டில் உருளி வைக்கும் முறை பற்றி தெரியுமா..?

சுருக்கம்

இன்று பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் உருளி வைக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது. இதை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மற்றும் வைக்க வேண்டிய முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் வாசல் முன் உருளியை வைக்க தொடங்கிவிட்டனர். அதுவும் உருளியில் எப்போதுமே தண்ணீரை நிரப்பி அதில் மலர்களை போட்டு வைத்திருப்பார்கள். அதிகபட்ச பலன்களை பெற சரியான இடத்தில் வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் வாழ்க்கை அறை மையத்தில் அல்லது உங்கள் அலுவலக முயற்சியில் வைக்கப்படும் இடம் போன்றவற்றை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும். சரி வாங்க இப்போது உருளி வைப்பதால், கிடைக்கும் பயன் என்ன..? மற்றும் அதை வைக்க வேண்டிய முறை ஆகியவற்றை பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

உருளியை வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் சுப பலன்கள் கிடைக்கும்:

  • பொதுவாகவே, உருளியை வீட்டின் முன் வாசலில், அதுவும் தென்மேற்கு மூலையில் தான் வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். காரணம், இது வீட்டு அழகுக்காக மட்டுமல்ல, வீட்டில் நேர்மறை ஆற்றலைத் தருவதற்காகதானாம். 
  • அதுபோல, வீட்டில் சண்டை சச்சரவுகளை நீங்க உரிமையை வீட்டில் வைக்கலாம். அதற்கு நீங்கள் உருளியை மண்ணில் வைக்க வேண்டும். மேலும் உருளியை பித்தலை, பஞ்சலோகம், பீங்கான், கண்ணாடியில் வைக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் எவர்சில்வர், பிளேஸ்டிக், அலுமினியம், இரும்பு ஆகியவற்றில் உருளியை வைக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 
  • உருளியை நீங்கள் வீட்டின் நுழைவாயிலின் வலதுபுறத்திலோ அல்லது இடதுப்புறத்திலோ வைக்கலாம். மேலும் வீட்டின் ஹாலிலும் ல் வைக்கலாம்.
  • அதுமட்டுமின்றி உருளியை கடைகளில் வைத்தால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் வியாபாரம் பெருகிக்கொண்டே இருக்கும். மேலும் தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் என்று அர்த்தம்.

இதையும் படிங்க: உருளியில் தண்ணீர் வைக்கும் போது இதையும் சேர்த்தால்.. வீட்டில் பணமழை கொட்டும்..

இவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

  • நீங்கள் வீட்டிலோ அல்லது கடைகளிலோ உருளியை வைக்கும் போது அதில் நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி மஞ்சள் பச்சை கற்பூரம் வாசனை திரவியமான ஜவ்வாது வெட்டிவேர் ஆகியவற்றை சேர்க்கலாம்.
  • உருளியில் பூக்கள் வைக்கும் போது நல்ல நறுமணம் உடைய பூக்களை வைக்க வேண்டும். இல்லை என்றால் மருத்துவ குணம் உள்ள பூக்களை வைக்கலாம்.
  • உதாரணமாக, உருளியில் நீங்கள் தாமரைப் பூ, சாமந்திப்பூ, ரோஜா பூ, மல்லி பூ போன்ற மலர்களை வைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் செவ்வரளி பூவை உருளியில் வைக்கவே கூடாது. ஏனெனில், இது வீட்டில் நஷ்டத்தை கொண்டு வரும்.
  • அதுபோல உருளியில் இருக்கும் நீரை தினமும் மாற்ற வேண்டும். அப்படி, செய்ய முடியாதவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது மாற்றுவது மிகவும் நல்லது.

வீட்டில் உருளை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்: 
வீட்டில் உருளி வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். உதாரணமாக, வீட்டிற்கு வருபவர்களின் பார்வை முதலில் உருளி மீது பட்டால் வீட்டில் கண் திருஷ்டி ஏற்படாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, உருளியை வீட்டில் வைப்பதால், வீட்டில் மனநிம்மதி, செல்வ வளம் செழிக்கும் என்பது நம்பிக்கை. உருளிக்கு சிறியது பெரியது என்று பாகுபாடு இல்லை. உங்கள் வீட்டில் நீங்களும் இந்த நன்மைகளை பெற விரும்பினால் உங்கள் வீட்டில் உருளியை வையுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Madurai chithirai thiruvizha 2026 கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சும் பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
South Facing Home : தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா? இந்த 4 பரிகாரங்களை செய்தால் நிம்மதியும், அதிர்ஷ்டமும் பெருகும்.!