உங்களுக்குப் பணத் தட்டுப்பாடு வரக்கூடாது என்றால், வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் வீட்டில் மயில் இறகுகளை வீட்டில் சரியான திசையில் வையுங்கள்.
இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் வாஸ்துசாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். வாஸ்து சாஸ்திரம் சரியான திசைகளைப் பற்றிய தகவல்களை தரும். அதே வேளையில், ஜோதிடம் எதிர்கால நிகழ்வுகள், வாழ்க்கை தொடர்பான ஒவ்வொரு அம்சத்தின் சூழ்நிலைகள் பற்றியும் கூறுகிறது. இந்த இரண்டு சாஸ்திரங்களிலும், மங்களகரமான படங்கள், சின்னங்கள் மற்றும் விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை அணிவதன் மூலமோ அல்லது உங்களிடம் வைத்திருப்பதன் மூலமோ, நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். இந்த மங்களகரமான விஷயங்களில் பகவான் கிருஷ்ணரின் மயில் தோகையும் அடங்கும்.
ஆம், மயில் இறகுகள் இந்து மதத்தில் கிருஷ்ணருடன் தொடர்புடையது. எனவே இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயில் தோகையை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால், அதை சரியான திசையிலும் இடத்திலும் வைத்திருந்தால் மட்டுமே இந்த நன்மைகளைப் பெறுவீர்கள். எனவே வீட்டில் மயில் தோகை வைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
வேலையில் வெற்றி: பகவான் கிருஷ்ணருக்குப் பிடித்த மயில் இறகு நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எனவே, நீங்கள் நீண்ட நாட்களாக சில வேலைகளைச் செய்ய முயற்சித்தும் அல்லது நல்ல நோக்கத்துடன் சில வேலைகளைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்காமல் போனால் மயில் தோகையை வைத்துக் கொள்ள வேண்டும். மயில் இறகு உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதோடு மட்டுமின்றி, அதில் வெற்றியும் கிடைக்க செய்யும். இதற்கு உங்கள் படுக்கையறையின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் மயில் இறகுகளை வைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடிந்து மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்.
இதையும் படிங்க: மயில் தோகை கொண்டு இந்த பரிகாரங்கள் செஞ்சி பாருங்க.. அப்போ நடக்குறத நீங்களே பாருங்ளே..!!
பணத்துக்கு பஞ்சமில்லை: நீங்கள் நிதி பிரச்சனைகளை எதிர்கொண்டால், மயில் இறகுகளை உங்கள் அலுவலகத்தின் தென்கிழக்கு திசையில் அல்லது பாதுகாப்பாக வைக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் நிறைய பயனடைவீர்கள். இதன் மூலம், உங்களுக்குப் பணத் தட்டுப்பாடு இருக்காது மற்றும் நிலுவையில் உள்ள பணத்தையும் எளிதாகத் திரும்பப் பெறுவீர்கள். இதனுடன், பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளையும் நீங்கள் சுலபமாக அறிந்து கொள்வீர்கள்.
இதையும் படிங்க: Vastu tips: மயிலிறகை இப்படி பயன்படுத்துங்க.. பலவிதமான பலன்களை பெறுவீங்க..!!
எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள்: மயில் இறகு மிகவும் ஈர்க்கக்கூடியது. நேர்மறை ஆற்றல் அதிலிருந்து வெளிவருகிறது மற்றும் அதை உங்களுடன் வைத்திருப்பதால்,
நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு எதிரி இருந்தால், அவர் பெயரில் எப்போதும் ஒரு மயில் தோகை வைத்திருக்க வேண்டும். இது உங்களுக்கும் அவருக்கும் இடையிலான கசப்பான உறவை நீக்கும்.
வாஸ்து தோஷங்கள் நீங்கும்: உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்க வேண்டுமானால், உங்கள் வீட்டின் பிரதான வாசலில் மயில் தோகைகளை வைக்க வேண்டும். வீட்டின் பிரதான கதவை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் அங்குள்ள விநாயகர் சிலையுடன் மயில் இறகுகளையும் வைக்க வேண்டும். மேலும், நீங்கள் உங்கள் வீட்டில் வாஸ்து படி பொருட்களை வைக்காவிட்டாலும், இவற்றை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
குழந்தைகள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்:
வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், கண்டிப்பாக மயில் இறகுகளை அவர்கள் படிக்கும் அறையிலோ அல்லது படிக்கும் பொருட்கள் வைக்கும் இடத்திலோ வைக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு எழுதுவதிலும் வாசிப்பிலும் ஆர்வம் அதிகரிக்கும். இப்படி செய்தால், உங்கள் குழந்தை தான் வகுப்பில் முதலிடம் மற்றும் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். அதுமட்டுமின்றி, குழந்தையின் புத்தகங்களுக்கு நடுவே மயிலிறகை வைத்தால், அவர்களின் கையெழுத்து அழகாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D