அட்சய திருதியை 2024: எப்போது..? தங்கம் வாங்க நல்ல நேரம் எப்போது தெரியுமா..? 

By Kalai SelviFirst Published Apr 26, 2024, 8:53 PM IST
Highlights

அட்சய திருதியை இந்து மதத்தில் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது. இந்நாளில், தங்கம் வாங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் கிடைக்கும்.

அந்தாளில் மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், என்றும் அழியாத திரிதியை திதி என்று சொல்லுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், அட்சய திரிதியை நாளில் நீங்கள் எந்த சுப காரியங்களை செய்தாலும் அதனால் நீங்கள் பெரும் புண்ணிய பலன்களும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். இதனால அன்றைய தினம் நல்ல செல்களை செய்ய வேண்டும். தவறான செயல்களின் மூலம் பெற்ற பாவங்களும் உங்களுடன் நிரந்தரமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதுமட்டுமின்றி, அள்ள அள்ள குறையாத என்ற ஒரு பொருளும் இதற்கு உண்டு. 15 திதிகளில் 3வது திதி தான் அட்சய திருதியாகும். 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு. குரு தங்கத்தை பிரதிபலிப்பதால், இந்நாளில் தங்கம் வாங்குவது சிறப்பாகிறது.

இதையும் படிங்க: தங்கம் குவிய! அட்சய திருதியை நாளில் இதை கண்டிப்பா செய்யுங்க! குபேரன், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்..

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது வாழ்க்கையில் மகிழ்ச்சி செல்வத்தையும் தருகிறது. இது தவிர, அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பானது. இவ்வாறு செய்வதன் மூலம் திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். மத சாஸ்திரங்களின்படி, அட்சய திருதியை நாளில் செய்யும் வேலை நித்திய பலனை தரும்.

இதையும் படிங்க: அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!

அதுமட்டுமின்றி, அட்சய திருதியை நாளில்‌ நீங்கள் வாங்கும்‌ பொருட்கள்‌ மேன்மேலும்‌ வளரும்‌. உதாரணமாக, அந்தாளில் நீங்கள் கல்‌ உப்பு மற்றும் மஞ்சள்‌ வாங்கினாலும்‌ அது தங்கம்‌ வாங்குவதற்கு சமம் மற்றும் அதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌. மேலும், உங்கள் வீட்டில் செல்வம்‌ பெருகும்‌. சரி இப்போது, இந்த ஆண்டு அட்சய திருதி எப்போது? தங்கமாக உகந்த நேரம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

2024 அட்சய திருதி எப்போது?
இந்த ஆண்டு அட்சய திருதி மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4:17 மணிக்கு திரிதியை திதி தொடங்கி,  மே 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது. உதயதிதியின் அடிப்படையில் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திதியை கொண்டாடப்படுகிறது. இது அட்சய திரிதியாவின் சரியான தேதியாகும்.

தங்கம் வாங்க நல்ல நேரம்: மே 10 மற்றும் 11 ஆகிய இரு தினத்தன்று, காலை 5:33 மணி முதல் மதியம் 12:18 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்க உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் வாங்கினால், வருடம் முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைப்பது உறுதி.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!