இந்த பதிவில் கல் உப்பை வைத்து கடனை தீர்ப்பதற்கான பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் கடனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை திருப்பிப் அடைப்பதற்குள் படாதப்பாடு படுகின்றனர். இன்னும் சொல்லபோனால், வட்டிக்காக கடன் வாங்கி, அந்த வட்டியை கட்டியே காலத்தை பலரும் கடந்து இருக்கிறார்கள். ஒருவரது வாழ்க்கையில் கடன் வந்துவிட்டால் அவரது வாழ்க்கையில் இருள் சூழ்ந்து கொள்ளும். குறிப்பாக, அவரிடம் இருக்க கூடிய அனைத்து விதமான நன்மைகளும் சென்று விடும். இந்நிலையில், இப்படிப்பட்ட கடன் பிரச்சினையைத் தீர்க்க செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் பிரச்சினை தீர கல் உப்பு பரிகாரம்:
பொதுவாகவே, ஒருவர் கடன்காரர் ஆவதற்கு முக்கிய காரணம், அவரது தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பணவரவு இல்லாதது தான். இந்து மதத்தில், பண கடவுளாக திகழ்பவர் 'மகாலட்சுமி' தான். இவரது அருள் இருந்தால் மட்டும் போதும் உங்களது தீராத கடனையும் உடனே தீர்க்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவரது அருளை பெற வேண்டுமென்றால் இவருக்கு உகந்த பொருளான 'கல் உப்பு' வைத்து பரிகாரம் செய்ய வேண்டும். சரி.. வாங்க இப்போது இந்த கல் உப்பை வைத்து கடனை தீர்ப்பதற்கான பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இவற்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள்:
நிங்கள் ஒரு பரிகாரத்தை செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு தேவையான பொருட்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த பரிகாரத்தை எந்த நாளில்.. எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்..
சந்திரன் மற்றும் சனி பகவான் அருள்:
அதுபோல, ஒருவர் கடனால் அவதிப்படுகிறார் என்றால், அவரது மனநிலை சீராக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், அதை சரி செய்ய சந்திரனின் அருள் அவருக்கு மிகவும் அவசியம். மேலும், ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானின் ஆதிக்கம் இருந்தால் கண்டிப்பாக அவர் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார். எனவே, இதிலிருந்த அவர் விடுபட சனி பகவானின் அருள் அவருக்கு வேண்டும்.
இதையும் படிங்க: உங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்க.. முதல்ல 'இத' செய்யுங்க..!
ஆகையால், சந்திரனுக்கு திங்கள் கிழமை உகந்தது என்பதால் அந்நாளில் சனி ஹோரை வரும் நேரத்திலும், சனிபகவானுக்கு சனிக்கிழமை உகந்தது என்பதால் அந்நாளில் சந்திர ஹோரை வரும் நேரத்திலும், இந்த கல் உப்பு பரிகாரத்தை நீங்கள் செய்தால், கண்டிப்பாக உங்களது கடன் பிரச்சனை தீரும்.
இதையும் படிங்க: கழுத்தை நெரிக்கும் அளவிற்கு கடன்...பசு மாட்டிற்கு இந்த 1 பொருளை மட்டும் தானம் கொடுத்தால் போதும்!
மேலும், இந்த கல் உப்பு பரிகாரத்தை எல்லா இடத்திலும் செய்ய கூடாது. நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும். மேலும், இந்த பரிகாரத்தை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும். அதாவது, மாதத்தின் முதல் திங்கட்கிழமை அல்லது முதல் சனிக்கிழமை செய்தால், அடுத்த மாதத்திலும் முதல் திங்கட்கிழமையில் தான் செய்ய வேண்டும்.
கல் உப்பு பரிகாரம் செய்முறை:
இந்த பரிகாரத்தை செய்ய முதலில் புதிதாக கல் உப்பை வாங்கி, உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு ஆறு அல்லது குளத்திற்கு செல்ல வேண்டும். பிறகு உங்கள் இரண்டு கையிலும் கல் உப்பை எடுத்து கொள்ளுங்கள். பிறகு, உங்கள் மனதில் இந்த கல் உப்பு எப்படி கரைகிறதோ, அதுபோல என்னுடைய எல்லா கடன் பிரச்சனைகளும் கரைய வேண்டும் என்றும் மனதார வேண்டி, நீரில் உப்பை கரைத்து விடுங்கள்.
உங்களது கடன் தீரும் வரை இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் செய்துவந்தால், கண்டிப்பாக உங்களது கடன் படிப்படியாக குறையும். பிறகு கடன் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D