அக்ஷ்ய திருதி 2023: பசுவிற்கு இதனை தானமாக கொடுத்தால் மகாலக்ஷ்மியின் அருளால் வற்றாத பணமும்,செல்வம் கிடைக்கும்!

By Dinesh TG  |  First Published Apr 21, 2023, 5:36 PM IST

அக்ஷ்ய திருதி 2023:அள்ள அள்ள குறையாத செல்வமும், மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருளும் பெற பசுவிற்கு இதனை தானமாக கொடுத்தால் கை மேல் பலன் தரும் தவிர அன்னை மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டிற்கே வந்து விடுவாள். அத்தகைய பொருள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.


அக்ஷ்ய எனில் குறைவில்லாத என்று பொருள் தரும். அக்ஷ்ய என்ற சொல் வளர்தல் என்பதை குறிப்பிடும். சயம் எனில் கேடு, அட்சயம் எனில் கேடில்லாத, அழிவில்லாத பொருள் என்பதை குறிக்கும். அன்றைய தினத்தில் நாம் செய்யும் எந்த ஒரு செயலும் குறையாமல் வளர்ந்து கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது . அதாவது திருதியை தினத்தில் நாம் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் விருத்தி யாகும் என்ற ஒரு பழமொழி உள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை திதி என்று வரும் அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் 3 ஆம் நாளில் மூன்றாம் பிறையன்று வருவதே அக்ஷ்ய திருதியை நாளாகும். இந்த வருடம் ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23ஆகிய 2 நாட்களில் அக்ஷ்ய திருதியை அனுசரிக்கப்பட்டுள்ளது .

அட்சய திரிதியை அன்று தங்கம் அல்லது வெள்ளி பொருட்கள் வாங்குவது நல்லது என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தங்க நகைகள் வாங்க இயலாதவர்கள் மகாலக்ஷ்மியின் அம்சமான கல் உப்பு, மஞ்சள், பருப்பு வகை போன்றவற்றையும் வாங்கி பூஜிக்கலாம். இத்தைகைய நாளில் நாம் எதை வாங்கினாலும் நமது செல்வம் இரட்டிப்பாக உயரும் நம்பிக்கை.

பொருட்களை வாங்குவது மட்டுமல்லாமல் அக்ஷ்ய திருதியை அன்று சில பொருட்களை நாம் தானமாக கொடுத்தால் அது உங்களது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அள்ள அள்ள குறையாத செல்வமும், மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருளும் பெற பசுவிற்கு இதனை தானமாக கொடுத்தால் கை மேல் பலன் தரும் தவிர அன்னை மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டிற்கே வந்து விடுவாள். அத்தகைய பொருள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.

வருகின்ற 23 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அக்ஷ்ய திருதியை அனுசரிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வெள்ளை மொச்சை மற்றும் கொண்டக்கடலை ஆகிய இரண்டையும் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாங்கிக் கொள்ளுங்கள்.

இரண்டையும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டு, பின் இவைகளை நன்றாக அரைத்து அதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து பசுவிற்கு தானமாக அல்லது சாப்பிட கொடுக்க வேண்டும். இதனை செய்து விட்டு , எந்த வேண்டுதல் ஆயினும் அன்னை மகாலக்ஷ்மியிடம் மனம் குளிர்ந்து வேண்டிக் கொண்டால் அது பரிபூரணமாக நடக்கும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. தவிர அட்சய திருதியை தினத்தன்று விஷ்ணுவிற்கு விரதமிருந்து நெல்லுடன் கூடிய அரிசியை நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எளிய பரிகாரங்களான இவைகளை செய்து மகாலக்ஷ்மியின் அருளால் வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைத்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்!

11 நாட்கள் இந்த பூஜை செய்து பாருங்க! பணக்கஷ்டமும், வறுமையும் உங்கள் வீட்டை விட்டு ஓடும்.

Tap to resize

Latest Videos

click me!