Guru peyarchi 2023 : குருப் பெயர்ச்சி லட்சார்த்தனை! - ஆலங்குடி ஆபத் சகாயேஷ்வரர் கோவிலில் இன்று நடைபெறுகிறது!

By Dinesh TG  |  First Published Apr 21, 2023, 1:54 PM IST

புகழ்பெற்ற ஆலங்குடி குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோயிலில் இன்று நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
 


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த தலம் குருபகவானுக்கு உகந்த தலமாக போற்றப்படுகிறது. இங்க குரு பகவானுக்கு தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.

இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வரும் 22-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.  இரவு 11.27 மணியளவில் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் சிறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திற்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவிலும் ஆலங்குடியில் சகாயேஷ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாற்று கரையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. பாற்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்ததால் ஆபத்து சகாயர் என்னும் பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது ஆலங்குடி எனும் பெயரும் இவ்வூருக்கு ஏற்பட்டது.

அசுரர்களால் தேவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமல் காத்த விநாயகர் எனும் பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பை உடையது அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமண மங்கலம் எனவும் பெயர்ப்படுகிறது.

குருப்பெயர்ச்சி 2023 ராசிபலன்: அதிர்ஷ்டம் அடிக்கப்போவது யாருக்கு? பணம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போவது யாருக்கு?

திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலம் ஆகிய ஆலங்குடி மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் முப்பெருமை கொண்டது. மத்தியார் சுகமாகிய திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானுக்கு பரிவார தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரனிய தலங்களில் நான்காவதாக சுயராட்சி பூஜைக்கு உகந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

இவ்வளவு புகழ் பெற்ற இத்திருத்தலத்தில்,  நடைபெற உள்ள குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருப்பகவனாக்கு லட்சார்ச்சணை திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.

Latest Videos

click me!