சிலர் எவ்வளவுதான் பணத்தை சம்பாதித்தாலும், அவர்களால் பணத்தை சேமிக்கவும், தக்க வைக்கவும் முடியவில்லை. எனவே பணத்தை நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அவ்வாறு செய்தால் சம்பாதித்த பணத்தை சேமிக்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். அது எவ்வாறு என்பதை இப்பதிவின் இப்பதிவின் மூலம் காணலாம்.
நம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான கஷ்டம் என்னவென்றால், எவ்வளவு தான் நாம் சம்பாதித்தாலும் நமது வீட்டில் பணம் தங்கவே மாட்டேங்குது என்பது தான். பணம் மனிதனின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. அப்படி மனிதனின் வாழ்வில் அங்கமாக இருக்கும் பணத்தை நாம் எப்படி வீட்டிற்கு கொண்டு வருவது என்று பார்ப்போம்.
பணம் அதிகம் பெற:
செந்தாமரையில் அமர்ந்து உள்ள தெய்வங்களை வழிபட வேண்டும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செவ்வலரி மலரை கொண்டு முருகனை வழிபட்டு வந்தால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும். தூய பன்னீரால் சொர்ண கர்ண பைரவருக்கு அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்தால் பணம் பெருகும்.
மகிழ்ச்சி நிறைந்த வீடு:
பெண்களை மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவர். ஒரு வீட்டில் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த வீட்டில் செல்வம் சேரும் என்பர். மேலும் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் அவரது வீட்டை தேடி செல்வம் வரும். எனவே மகிழ்ச்சியாக இருந்தால் உங்களது வீட்டை தேடி மகாலட்சுமி வருவாள்.
அன்னதானம்:
சம்பாதித்த பணத்தில் ஒரு பங்கு எடுத்து பிறருக்கு அன்னதானம் செய்தால் பணம் சேரும். வீட்டில் இருக்கும் பசு மற்றும் கன்றுகளுக்கு உணவளித்தால் புண்ணியம் கிடைக்கும், மேலும் செல்வம் பெருகும்.
மஞ்சள் கிழங்கு:
வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுத்தால், பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி சந்தோஷம் மற்றும் செல்வம் பெருகும்.
இதையும் படிங்க: குருப்பெயர்ச்சி 2023 ராசிபலன்: அதிர்ஷ்டம் அடிக்கப்போவது யாருக்கு? பணம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போவது யாருக்கு?
பூவும் பொட்டும்:
பெண்கள் எப்போதும் தலையில் பூ மற்றும் பொட்டு வைத்து மங்களகரமாக இருக்க வேண்டும். மேலும் பெண்கள் தலையில் பூவும் நெற்றியில் பொட்டும் வைக்காமல் பூஜை செய்யக்கூடாது. பெண்கள் வளையல் மெட்டி மூக்குத்தி இவை அனைத்தையும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.