இன்று ஆவணி தேய்பிறை அஷ்டமி திதி.. இந்த 1 பூவை வைத்து பைரவரை வழிபடுங்க..கடன் சுமை நீங்கும்!

By Kalai Selvi  |  First Published Aug 26, 2024, 10:29 AM IST

Kala Bhairava : இன்று ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியாகும். எனவே, இந்நாளில் பைரவரை எப்படி வழிபட்டால் கடன் சுமை எப்படி நீங்கும் எனபதை குறித்து இங்கு பார்க்கலாம்.


இன்று ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியாகும். இன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. எனவே, இன்று மாலை வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை முடித்துவிட்டு, பிறகு 7:30 மணிக்கு மேல் கோவிலுக்கு சென்று பைரவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஏனெனில், திங்கள்கிழமையில் வந்திருக்கும் இந்த தேய்பிறை அஷ்டமி திதி மிகவும் விசேஷமானது என்பதால், பைரவரை வழிபட தவற விடாதீர்கள். முக்கியமாக, இந்நாளில் நீங்கள் பைரவரை வழிபாடு செய்தால், உங்களது கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும் என்பது ஐதீகம்.

2024 ஆவணி தேய்பிறை அஷ்டமி திதி : 

Tap to resize

Latest Videos

undefined

இந்த 2024ஆம் ஆண்டு ஆவணி மாதம் வந்திருக்கக் கூடிய இந்த தேய்பிறை அஷ்டமி திதியானது 'ஸ்தாணு' அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்நாளில் மாலை பைரவர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும் என்பதால், அதில் கலந்து கொண்டு, அபிஷேகத்தை கண்குளிர பார்த்து ரசியுங்கள். முடிந்தால்,  அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுங்கள்.

இதையும் படிங்க:  காசியை ஆட்சி செய்யும் கால பைரவர் பற்றி தெரியுமா? பலருக்கு தெரியாத வியக்க வைக்கும் தகவல்கள்..

2024 ஆவணி தேய்பிறை அஷ்டமி திதி வழிபாடு முறை : 

இதற்கு முதலில், 2 மண் அகல் விளக்கு எடுத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு  சிகப்பு நிற துணியில் 27 மிளகு வைத்து, அந்த துணியை முடிச்சு போட்டு, அந்த துணியில் தீபம் ஏற்றுங்கள். நெருப்புபட்டு மிளகு வெடிக்கும். மிளகு எப்படி வெடிக்கிறதோ, அதுபோலத்தான் உங்களது கடன் சுமையும் கண்ணுக்கு தெரியாமல் வெடித்து போகும். இதுதான் இந்த விளக்கின் சக்தி என்று சொல்லப்படுகிறது. எனவே, இன்று மாலை நீங்கள் இந்த விளக்கை சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சன்னதியில் ஏற்றினால் உங்களது கடன் சுமை நிச்சயமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க:  உங்கள் வாழ்க்கையில் நன்மை கிடைக்குமா? கால பைரவரை இந்த மந்திரங்கள் சொல்லி வழிபடுங்க....!!

செவ்வரளி பரிகாரம் : 

ஒருவேளை உங்களால் விளக்கேற்றி வழிபட முடியவில்லை என்றால், நீங்கள் பைரவருக்கு பிடித்த சிவப்பு நிற செவ்வரளி பூவை வாங்கி வாங்கிக் கொடுத்து வழிபடுங்கள். இப்படி வழிபட்டால், கண்டக சன்னியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்

இவை இரண்டுமே என்னால் செய்ய முடியவில்லை, ஆனால் எனது கடன் பிரச்சனை நீங்க வேண்டும்.. எங்களது குடும்பத்திற்கும் பைரவனின் ஆசி கிடைக்க வேண்டும்.. நாங்கள் என்ன செய்வது என்று நீங்கள் புலம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி, "ஸ்ரீ பைரவர் போற்றி போற்றி" என்ற மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே, அந்த பிஸ்கட்டுகளை பைரவரின் வாகனமான நாய்களுக்கு சாப்பிட கொடுங்கள். நாய்கள் அந்த பிஸ்கட்டை பசியாற சாப்பிட்டு விட்டால் உங்களது கடன் சுமையும் தீரும் பைரவனின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!