Aadi velli: முதல் ஆடி வெள்ளி! இப்படி வழிபாடு செய்தால் பலன்கள் பெருகும்! அம்மன் அருள் கிடைக்கும்!

Published : Jul 18, 2025, 05:46 AM IST
aadi month traditions dos and donts with scientific reasons

சுருக்கம்

ஆடி மாதத்தின் முதல் வெள்ளி அன்று அம்மனை வழிபடுவதன் சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள். குடும்ப நலன், தொழில் முன்னேற்றம், திருமணத் தடை நீங்க, குழந்தைப் பாக்கியம் கிடைக்க அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை அறியலாம்.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளி – அம்மன் அருளைப் பெறும் விதமான சிறப்பு வழிபாடுகள்

தமிழ் மாதங்களில் ஆன்மீக மகத்துவம் மிகுந்த மாதம் ஆடி மாதம். இதில், ஆடி வெள்ளி கிழமைகள் பெண்கள் மற்றும் குடும்பத்திற்கு பெரும் பாக்கியத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 5 ஆடி வெள்ளிகள் வருவதால், இவை அனைத்தும் ஆன்மீக ரீதியாகவும், வழிபாட்டு முறைகளிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அதில் முதன்மையானது தான் முதல் ஆடி வெள்ளி.

முதல் ஆடி வெள்ளி வழிபாட்டு முறை

இந்த நாளில் சூரிய உயத்திற்கு முன்பாக அதிகாலையில் எழுந்து குளித்து வாசலை துளசி அல்லது வேப்பிலை நீர் தெளித்து, அழகான கோலமிட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பூஜை அறையைத் தூய்மைப்படுத்தி, எல்லா தெய்வப் படங்களையும் அழகாக அலங்கரிக்க வேண்டும். வீட்டு வாசலில் வேப்பிலைத் தொங்கவைத்து, அம்மனை வரவேற்கும் விதமாக மணமிக்க பூக்கள் கொண்டு அலங்கரிக்கவும்.

இப்படி வணங்கினால் நினைத்தது நடக்கும்

அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, குங்குமப்பூ, பூஜை திரவியம், விளக்கு ஆகியவற்றை அணிவகுத்து தீபம் ஏற்றி தீபாராதனை காட்டலாம். நம்முடைய குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்கும் தனியாக தீபம் ஏற்றி நெய் விட்டு வழிபடலாம். அம்மனை ஆதிபராசக்தி, புவனேஸ்வரி, மீனாட்சியம்மன், காளியம்மன், அகிலாண்டேஸ்வரி போன்ற பெயர்களில் நினைத்து வணங்கலாம்.

அம்மனுக்கு பிடித்த பிரசாதம்

பெரிய கர்ப்பிணிப் பெண்கள், திருமணமாகாத பெண்கள், தொழிலில் தடைகள் உள்ளவர்கள், குழந்தைப் பாக்கியம் வேண்டுபவர்கள் – இவ்வனைத்துக்குமான தீர்வாக அம்மனை வணங்குவது சிறந்தது. இந்த நாளில் சர்க்கரைப் பொங்கல், வெல்லப்பாயசம், அல்லது தேன் கலந்து தயிர் சாதம் போன்றவைகளை நெய்வேதியமாக வைத்து அம்மனை வேண்டலாம். மேலும், குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஏற்றி, வழிபாடு செய்தால் குடும்பத்தில் வளமும் ஒழுக்கமும் நிலவும்.

அம்மன் அருள் கண்டிப்பாக உண்டு

சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட வழிபாட்டு பொருட்களை வழங்குவது மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். இவ்வாறு முதல் ஆடி வெள்ளியில் அம்மனை மனமுவந்து வணங்கினால், திருமணத் தடை நீங்கி, குழந்தைப் பாக்கியம் கிட்டி, தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, குடும்பத்தில் சாந்தி நிலவுமென ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: ஜனகரின் மாப்பிள்ளை ஸ்ரீராமன் கிடையாதாம்.! அப்போ உண்மையான மாப்பிள்ளை யார் தெரியுமா?!
Dhanusu Rasi Palan Dec 04: தனுசு ராசி நேயர்களே, இன்று சவால்கள் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.!