ஒவ்வொரு ஆடிப்பூரம் அன்றும் அம்மனுக்கு எதற்காக வளையல் அணிவிக்கப்படுகிறது மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இங்கே பார்போம்.
ஆடிப்பூரம் என்பது ஆண்டாளின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போலவே, எல்லா மங்கையர்களுக்கும் அரசியான அம்மனுக்கும் வளைகாப்பு நடத்தப்படும் நாளே ஆடிப்பூரம் ஆகும்.
அம்மன் வளையல் அணிவதற்கான புராணக் கதை:
வளையல் வியாபாரி ஒருவர் ஆந்திராவில் இருந்து சென்னை வந்து வளையல்களை விற்றுள்ளார். பின் மீதி வளையல்களோடு ஊர் திரும்புகையில், பெரியபாளையத்தில் ஒரு மரத்தின் அடியில் களைப்பின் காரணமாக படுத்து உறங்கினார். அவர் கண்விழித்ததும் பார்த்தபோது மீதி இருந்த வளையல்கள் காணாமல் போய் இருந்தது. பின் கவலையோடு ஊர் திரும்பினார். அன்றிரவு, வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், அவரது வளையல்களை தான் அணிந்து கொண்டதாகக் கூறினார். மேலும் பெரியபாளையம் வேப்பம் மரத்தின் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் தனது பெயர் பவானி என்றும், தன்னை வணங்குவோரின் வாழ்க்கை செழிக்கும் என கூறியதோடுமட்டுமல்லாமல், வளையல் வியாபாரியை ஆசிர்வதித்தார்.
இதையும் படிங்க: Aadi Velli 2023: ஆடி வெள்ளி முக்கியத்துவம் என்ன?இந்நாளில் சக்தி தேவியை வழிபடுங்க நன்மைகள் பல கிடைக்கும்..!!
பின் அந்த வியாபாரி தான் கண்ட கனவை தன் நண்பர்கள், உறவினர்களிடம் கூறி அவர்களுடன் சென்னை, பெரிய பாளையம் வந்து, அம்மக்களிடம் அம்மன் தன் கனவில் தோன்றி கூறியதைச் சென்னார். இதனை அடுத்து, அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்தனர். மேலும் அம்மனுக்கு வளையல் அணியும் ஆசை ஏற்பட்டதால் தான் புற்றிலிருந்து வெளியே வந்து, அந்த வியாபாரியின் வளையல்களை எடுத்து அணிந்து கொண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு தான் ஆடிப்பூரம் அன்று எல்லா கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் அணியப்படுகிறது.
வளையல் பிரசாதம்:
ஒவ்வொரு ஆடி பூரம் அன்றும் பக்தர்கள் அம்மனுக்கு வளையல்களை காணிக்கையாக கொடுக்கின்றனர். அந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவித்து பூஜை நடைபெறும். பூஜை முடிந்த பெண் கூடியிருக்கும் பெண் பக்தர்களுக்கு அந்த வளையல்கள் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு பிரசாதமாக கொடுக்கப்பட வளையல்களை கர்ப்பிணி பெண்கள் அணிந்து கொண்டால் அவர்களுக்கு
சுகப்பிரசவம் உண்டாகும். மற்றும் பிள்ளை வரம் வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுபோல் திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்றும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
இதையும் படிங்க: Aadi Velli:சொன்னா நம்பமாட்டீங்க.. ஆடி வெள்ளிக்கிழமை பெண்கள் விரதம் இருந்தால் இவ்வளவு நன்மைகளா?
சுக்கிரன் அருள்:
பூரம் என்பது சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் ஆகும். சுக்கிரனின் தெய்வம் ஶ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் ஆவார். எனவே, ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ரங்கநாதரையே காதலித்து அவரையே மணந்தாள். இதனால் தான் சுக்கிரன் அருள் உங்களுக்கு இருந்தால் தம்பதியர் ஒற்றுமை நிலைத்து இருக்கும் மற்றும் விரைவில் திருமணம் கைக்கூடும்.