தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதிலும் குறிப்பாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த வழிபாட்டுக்குரிய மாதமாக கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை என்றாலே சிறப்பு வாய்ந்தது. அதுவும் ஆடி மாதம் வெள்ளியென்றால் சொல்லவே வேண்டாம். ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதிலும் குறிப்பாக ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த வழிபாட்டுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம். குறிப்பாக இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளியன்று பெண்கள் விரதம் இருந்து வழிபடுவதை ஐதீகம். இதனை சுக்கிர வார விரதம் என்று கூறுவர்.
undefined
ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் என்னென்ன பலன்கள்?
* ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
* ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் தகுந்த வேலை கிடைக்காமல் கஷ்டபட்டவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
* ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று, சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டி மகாலட்சுமியை பூஜித்து வரலட்சுமி நோன்பு மேற்கொள்வார்கள்.
* வரலட்சுமி நோன்பின்போது தேவியின் பாதங்களில் திருமாங்கல்ய சரடு வைத்துப் பூஜை செய்து வணங்கினால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.
* ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் பெண்களுக்கு திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
* ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
* ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான வழி உண்டாகும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
* ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும்.
* ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.