இந்த ஆண்டு தமிழ் மாதமான ஆடியில் ஆடி அமாவாசை இருமுறை வருகிறது. முதல் அமாவாசை ஆடியின் முதல் நாளான ஜூலை 17ஆம் தேதியும், இரண்டாவது அமாவாசை ஆகஸ்ட் 16ஆம் தேதியும் வருகிறது.
ஆடி அமாவாசை என்பது தென்னிந்தியாவில் தமிழ் சமூக மக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு பண்டிகையாகும். இது பொதுவாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அதாவது தமிழ் மாதமான ஆடியில் வரும். இந்த ஆண்டு அமாவாசை தமிழ் மாதமான ஆடியில் இருமுறை வருகிறது. அதாவது முதல் அமாவாசை ஆடியின் ஜூலை 17ஆம் தேதியும், இரண்டாவது அமாவாசை ஆகஸ்ட் 16ஆம் தேதியும் வருகிறது. அம்மாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் காலம் ஆகும். ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் போது சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுசரிக்கப்படுகிறது.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றையெல்லாம் தரவல்லவர். சந்திரன் மனதுக்கு அதிபதியானவர் என்பதால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றையெல்லாம் தரவல்லவர். சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் ஜோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனியும் சந்திரனையும் தாய் தந்தையாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.
இந்நாளில் தான் தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடுகின்றனர். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது இந்நாளை வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும். அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.
ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதத்தை கடைப்பிடிக்கின்றன. அதுபோல் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும், காலமான தந்தை, தாய்க்கு பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதம் ஆகும்.
இந்நாளில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, தருப்பணம் செய்து, பிண்டதானம், சிரார்த்தம் செய்து, இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்து அவர்களுடன் உணவு உட்கொண்டு விரதக் கொள்கையுடன் இருப்பர். மேலும் இறந்த தந்தை, தாயை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுசரிக்கிறார்கள். எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: Aadi Amavasya 2023 : ஆடி அமாவாசை ஏன் சிறப்பானது? அன்றைய தினம் எப்படி முன்னோர்களை வழிபட வேண்டும்?
முன்னோர்களை வழிபடவும், முன்னோர்களை திருப்திப்படுத்த புனித சடங்குகளை செய்யவும்:
ஆடி அமாவாசை என்பது நம் முன்னோர்களை மதிக்கவும், அவர்களின் ஆசிகளைப் பெறவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மங்களகரமான நாள்.
ஆடி அமாவாசை வழிபாட்டின் முக்கியத்துவம்:
ஆடி அமாவாசை நாளில் சடங்குகள் மற்றும் அனுசரிப்புகள்: