Asianet News TamilAsianet News Tamil

Aadi Amavasya 2023 : ஆடி அமாவாசை ஏன் சிறப்பானது? அன்றைய தினம் எப்படி முன்னோர்களை வழிபட வேண்டும்?

ஆடிப்பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி கிருத்திகை, ஆடி தபசு, ஆடி பெருக்கு என பல விசேஷங்கள் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. 

Aadi Amavasya 2023 : Why is Aadi Amavasya special? How should ancestors be worshiped on that day?
Author
First Published Jul 12, 2023, 2:40 PM IST

ஆடி மாதம் என்றாலே ஆன்மீக ரிதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாதம். அம்மனுக்கு உரிய மாதம். ஆடிப்பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி கிருத்திகை, ஆடி தபசு, ஆடி பெருக்கு என பல விசேஷங்கள் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகின்றன.  இத்தகைய சிறப்பு மிக்க ஆடி மாதம் வரும் 17-ம் தேதி திங்கள்கிழமை பிறக்கிறது. 

இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஆடி மாதத்தில் முதல் நாள் ஆடி 1-ம் தேதி அன்று அமாவாசை வருகிறது. அதே போல ஆடி 31-ம் தேதி, ஆகஸ்ட் 16 அன்று 2-வது அமாவாசை வருகிறது. பொதுவாக ஒரு மாதத்தில், ஜென்ம நட்சத்திரம் இரண்டு தினங்கள் வந்தால், 2-வது நட்சத்திரத்தையே நாம் ஜென்ம நட்சத்திரமாக கருத வேண்டும். எனவே 2-வது வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாக கருதி வழிபாடு செய்ய வேண்டும்.

ஆடி மாதத்தில் திருமணம், ஹவுஸ்வார்மிங் போன்ற எந்த சுப நிகழ்ச்சிகளும் செய்யப்படுவதில்லை ஏன்..!!

ஆடி மாதம், தட்சணாயன காலத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். தட்சணாயன காலத்தில் சூரிய பகவான் தெற்கில் இருந்து தனது பயணத்தை தொடங்குவார். இந்த காலத்தில் மக்கள் புண்ணிய நதிகளில் புனித நீராடுவது விசேஷமாகும்.

ஆடி அமாவாசை ஏன் சிறப்பானது?

அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும் நாளே ஆடி அமாவாசை ஆகும். சந்திரன் என்றால் தாய், தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை. தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இணையும் அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களில் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘ பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.

அந்த வகையில் இந்த ஆடி, 31-ம் தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரும் அமாவாசையை கடைபிடிக்க வேண்டும். அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும். அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்கலாம்.

ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம். எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். வருடத்தில் வரும் மற்ற அமாவாசை தினங்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்து பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். நம் இல்லங்களில் சகல நன்மைகளும் நடக்கும்.

 

எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியலயா? இதை செய்தால் போதும்.. பணம் வீண் விரயமாகாது..

Follow Us:
Download App:
  • android
  • ios